சீனாவில் ஐபோன் ஆலையில் தீ விபத்து!

0
171

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான பாக்ஸ்கான் தொழில்நுட்பக் குழுமத்தின் பிரதான ஐபோன் தயாரிப்பு ஆலை வளாகத்தில் நேற்று மாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சீனாவின் செங்க்சோ நகரில் உள்ள தொழிற்பேட்டையில் இந்த ஆலை அமைந்துள்ளது.

முதலில் குளிர் சாதன இயந்திரத்தின் விசிறியில் இருந்து தொடங்கிய தீ காற்றோட்டத்திற்காக உள்ள குழாய்கள் வழியாக மளமளவென ஆலையின் கூரை மீது பரவியது. உடனடியாக ஆலை வளாகத்தின் அருகே உள்ள தீயணைப்பு அதிகாரிகள் மூலமாக தீ உடனடியாக அணைக்கப்பட்டது.

இந்த தீ விபத்தால் உயிர் சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை என்று பாக்ஸ்கான் குழுமம் இன்று தெரிவித்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து உள்ளூர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY