அமெரிக்காவை அடுத்து ஸ்பெயினிலும் சக்திவாய்ந்த நில நடுக்கம்

0
188

அமெரிக்காவை அடுத்து ஸ்பெயின் மற்றும் மொராக்கோ நாட்டின் மத்திய தரைக்கடல் பகுதியிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவாகியுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் உள்ள மலாகாவின் தென்கிழக்குப் பகுதியில் இருந்து 162 கி.மீ தொலைவில் உணரப்பட்ட இந்த நில நடுக்கம் 33 கி.மீ ஆழத்திற்கு மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

கடந்த 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஸ்பெயினின் அல் ஹோசிமா அருகே ஒரு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 631 பேர் பலியாயினர் என்பது நினைவு கூரத்தக்கது.

LEAVE A REPLY