ஆசியாவின் பல பகுதிகளில் கடுமையான குளிர், போக்குவரத்து பாதிப்பு

0
192

ஆசியாவின் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் குளிர் காரணமாக பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தென் கொரியத் தீவான ஜேஜூவில் கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவுகு பனிப்பொழிவு ஏற்பட்டதால அப்பகுதியில் இரண்டாவது நாளாக விமான சேவைகள் ரத்தாகியுள்ளன.

இதன் காரணமாக ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பல இடங்களில் சிக்கியுள்ளனர்.

கடும் பனி மற்றும் வேகமாக வீசும் காற்றின் காரணமாக ஜப்பானிலும் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மிதமான வெப்ப நிலைக்கு பழக்கமான ஹாங்காங் வாசிகளும் வெப்பநிலை மூன்று டிகிரிகளுக்கு குறைந்ததை அடுத்து குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த 60 ஆண்டுகளில் இந்த அளவுக்கு அங்கு வெப்பம் குறைந்தது இல்லை. சீனாவின் பல பகுதிகளிலும் கடுமையான காலநிலை நிலவி வருவதால், அரசு இரண்டாவது அதியுச்ச வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.

LEAVE A REPLY