தலை மறைவாகியபோது 5 பிடிவிறாந்துகள் பிறப்பிக்கப்பட்டவர் கைது

0
206

பிள்ளைகள் தாபரிப்புப் பணம் செலுத்தாமலும் நீதிமன்றத்தின் அழைப்பாணைக்கு சமுகந்தராமலும் தப்பித் தலைமறைவாகி வாழ்ந்து வந்த 5 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட குற்றவாளியை தாம் கைது செய்திருப்பதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

மருதமுனையைச் சேர்ந்த இந்த நபரின் தலைமறைவு இருப்பிடத்தை அறிந்த பொலிஸார் வெள்ளிக்கிழமை அவரை மருதமுனையில் உள்ள மறைவிடத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

கல்முனை தலைமையக சிறு குற்றப் பிரிவுப் பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எம்.ஐ. நௌபர் தலைமையில் சென்ற பொலிஸ் அதிகாரிகள் குழுவினரே இவரைக் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணையை கல்முனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(அப்துல்லாஹ்)

LEAVE A REPLY