எனது பெயரை பயன்படுத்தி தொழில், பதவி உயர்வு பெற்றுத் தருவதாக பண மோசடி; ஏமாற வேண்டாம்: பிரதியமைச்சர் பைஷல் காசிம்

0
239

சுகா­தார பிர­தி­ய­மைச்­சரின் இணைப்­பா­ளர்கள் என்று கூறிக்­கொள்ளும் சிலர் சுகா­தா­ரத்­து­றையில் தொழில் பெற்­றுத்­த­ரு­கின்றோம், கல்­வித்­து­றையில் உள்ள சிற்­றூ­ழி­யர்­க­ளுக்கு பதவி உயர்வு பெற்­றுத்­த­ரு­கின்றோம் என்று கூறி மக்­களை ஏமாற்றி பெருந்­தொ­கை­யான பணத்­தினை பெற்று வரு­கின்­றமை தொடர்பில் அவ­தா­ன­மாக இருக்­கு­மாறு பிரதியமைச்சர் பைசல் காசிம் தெரி­வித்தார்.

இது விட­ய­மாக சுகா­தார பிர­தி­ய­மைச்சர் பைசல் காசிம் மேலும் தெரி­விக்­கையில்,சுகா­தா­ரத்­துறை சம்­மந்­த­மான பிரச்­சி­னை­க­ளையும் அது­தொ­டர்­பி­லான தேவை­களை என்­னுடன் நேர­டி­யா­கவோ அல்­லது தொலை­பேசி ஊடா­கவோ பேசி அதற்­கான தீர்­வு­களை என்­னுடன் பெற்­றுக்­கொள்ள வேண்டும்.

எமது அமைச்­சி­னூ­டாக வழங்­கப்­ப­ட­வுள்ள நிய­ம­னங்கள் யாவும் குறிப்­பிட்ட பிர­தே­சத்­தி­லுள்ள கட்­சிப்­பி­ர­மு­கர்­க­ளி­னூ­டாக மட்­டுமே நடை­பெறும்.

தொழில் வழங்கும் விட­யத்தில் எந்த முக­வர்­க­ளையும் நான் ஈடு­ப­டுத்­தப்­ப­டவும் இல்லை. அவ்­வாறு ஈடு­ப­டுத்­தப்­ப­டவும் மாட்டேன்.

குறிப்­பாக கிரா­மப்­பு­றங்­க­ளி­லுள்ள படித்த தமிழ், முஸ்லிம் இளைஞர், யுவ­திகள் இந்த ஏமாற்றுப் பேர்­வ­ழி­க­ளிடம் பெருந்­தொ­கை­யான பணத்தை வழங்­கி­யி­ருப்­ப­தாக பல முறைப்­பா­டுகள் எனக்கு கிடைத்­துள்­ளன.

எனவே இவ்­வி­ட­யத்தில் கவ­ன­மாக இருக்­கு­மாறு கேட்­டுக்­கொள்­கின்றேன் என்றார்.

(MN)

LEAVE A REPLY