மக்­காவில் இடம்­பெற்ற பாரம் தூக்கி விபத்து : வழக்கு விசா­ர­ணைகள் விரைவில்

0
266

மக்­காவின் புனித பள்­ளி­வா­யாலில் பாரம் தூக்கி விழுந்­ததில் ஏற்­பட்ட அனர்த்தம் தொடர்பில் விசா­ர­ணை­களை முடி­வு­றுத்தி பல­ருக்கு எதி­ராக குற்­றப்­பத்­தி­ரங்­களைத் தயார் செய்து அந்த வழக்குக் கோவை­யினை றியாதில் அமைந்­துள்ள புல­னாய்வு மற்றும் பொது அர­ச­த­ரப்புப் பணி­யகம் மக்­காவில் உள்ள அதன் அலு­வ­ல­கத்­திற்குச் சமர்ப்­பித்­துள்­ளது.

பொறி­யி­லா­ளர்கள், திட்ட முகா­மை­யா­ளர்கள் மற்றும் ஏனைய அலு­வ­லர்­க­ளுக்கு எதி­ராக மனிதப் படு­கொலை மற்றும் பாது­காப்பு ஒழுங்கு விதி­களை மீறி­யமை மற்றும் கவ­னத்தில் எடுக்­காமை உள்­ளிட்ட குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­ப­டக்­கூடும் என உள்ளூர் ஊட­கங்­களை மேற்­கோள் காட்டி தகவல் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

அதிக எண்­ணிக்­கை­யி­லான மக்கள் பள்­ளி­வா­ய­லினுள் இருக்­கத்­தக்­க­தாக எவ்­வாறு பாரம் தூக்கி பொருத்­தப்­பட்­டது என்­பது தொடர்பில் இந்த நீதி­மன்ற வழக்கு அதிக கவனம் செலுத்த வாய்ப்­புள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

சவூதி பின்­லேடன் நிறு­வ­னத்தின் நிறை­வேற்று அதி­கா­ரிகள் மற்றும் பணி­யா­ளர்­களை விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­து­வது உட்­பட இந்த சம்­பவம் தொடர்பில் விசா­ரணை நடத்­து­மாறு புல­னாய்வு மற்றும் பொது அர­ச­த­ரப்புப் பணி­ய­கத்­திற்கு இரு பெரிய பள்­ளி­வா­யல்­க­ளி­னதும் பொறுப்­பா­ள­ரான மன்னர் சல்மான் உத்­த­ர­விட்­டி­ருந்தார்.

குறித்த பாரம் தூக்கி விபத்து கடந்த செப்­டம்பர் மாதம் வரு­டாந்த ஹஜ்­ஜிற்கு சில வாரங்­க­ளுக்கு முன்­ன­தாக இடம்­பெற்­றது. இந்த விபத்தில் 107 பேர் உயி­ரி­ழந்­த­தோடு 238 பேர் காய­ம­டைந்­தனர்.

இந்தக் கோர விபத்தில் உயி­ரி­ழந்த மற்றும் காய­ம­டைந்­தோரின் குடும்­பங்­க­ளுக்கு பாரிய நட்­ட­ஈட்டுத் தொகை­யினை வழங்­கு­மாறு இரு பெரிய பள்­ளி­வா­யல்­க­ளி­னதும் பொறுப்­பா­ள­ரான மன்னர் சல்மான் உத்­த­ர­விட்டார்.

விபத்தின் பின்னர் அர­சாங்­கத்தின் சார்பில் மர­ண­ம­டைந்­தோரின் குடும்­பங்­க­ளுக்கு தலா ஒரு மில்­லியன் சவூதி ரியால்­களும், காய­ம­டைந்து நிரந்­தர அங்­க­வீ­ன­ம­டைந்­தோ­ருக்கு ஒரு மில்­லியன் சவூதி ரியால்­களும், காய­ம­டைந்­தோ­ருக்கு தலா ஐந்து இலட்சம் சவூதி ரியால்­களும் வழங்­கு­மாறு உத்­த­ர­வி­டப்­பட்­டது.

அது­மட்­டு­மல்­லாது, குறித்த நட்டஈட்டுத் தொகைக்கு மேலதிகமாக நீதிமன்றத்தினால் வதிக்கப்படும் நட்டஈட்டுத் தொகையினையும் மரணமடைந்தோரின் குடும்பங்களும், காயமடைந்தோரும் பெற்றுக்கொள்ள முடியும் என மன்னர் சல்மான் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

-Vidivelli-

LEAVE A REPLY