மட்டக்களப்பு – வந்தாறுமூலை பிரதான வீதியில் விபத்து! ஆறு பேர் காயம்

0
332

மட்டக்களப்பு – வந்தாறுமூலை பிரதேசத்தில் இன்று (24) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் குழந்தையொன்று உட்பட ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வாழைச்சேனையிலிருந்து ஏறாவூர் நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியொன்று வீதியை விட்டு விலகி, வீதியின் வலது புறமாகவுள்ள மதகு ஒன்றினுள் குடைசாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் முச்சக்கரவண்டிச் சாரதியான ச.மகாதேவன் மற்றும் முச்சக்கரவண்டியில் பயணித்த கே.பரதன், கே.யாழினி, கே.அனுஷ்கன், ஐ.ரஞ்ஜினி மற்றும் பீ.காருனி (01) ஆகியோரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.விபத்துக்குள்ளான ஆறு பேரும் மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டு, பின்னர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவர்களில் பீ.காருனி என்ற குழந்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

batti_vantharu_acci_02 batti_vantharu_acci_03

LEAVE A REPLY