சிகிச்சை அளித்த ஊழியர்களுக்கு 3,000 பிராங்க் கொடுத்த கத்தார் மன்னர்

0
535

சுவிட்சர்லாந்து நாட்டில் கால் முறிவு சிகிச்சைக்காக சேவை செய்த மருத்துவமனை ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் கத்தார் நாட்டு முன்னாள் மன்னர் 3,000 பிராங்க்  கொடுத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கத்தார் நாட்டு முன்னாள் மன்னரான Sheikh Hamad bin Khalifa Al Thani என்பவர் மோரோக்கோ நாட்டிற்கு சுற்றுப்பயணமாக கடந்த டிசம்பர் மாதம் சென்றுள்ளார்.

அப்போது, எதிர்பாராத விபத்தில் அவரது காலில் முறிவு ஏற்பட்டு அவசரமாக சுவிட்சர்லாந்த் நாட்டிற்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

சூரிச்சில் உள்ள Schulthess என்ற மருத்துவமனையில் வாரக்கணக்கில் சிகிச்சை பெற்ற முன்னாள் மன்னர் சில தினங்களுக்கு முன்னர் தான் தாய்நாட்டிற்கு திரும்பியுள்ளார்.

ஆனால், முன்னாள் மன்னர் மருத்துவமனையை விட்டு வெளியேறுவதற்கு முன்னதாக தனது சிகிச்சைக்கு உதவிய ஒவ்வொரு ஊழியர்களுக்கும் 3,000 பிராங்க் ‘டிப்ஸ்’(Tips) கொடுத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இதனை மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரியான ஆண்ட்ரியா ரிட்ஸ் உறுதி செய்துள்ளார்.

ஆண்டிரியா கூறியபோது ‘பொதுவாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு உதவும் செவிலியர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு 20 முதல் 50 பிராங்க்குகள் டிப்ஸ் கிடைக்கும்.

ஆனால், மருத்துவமனை வரலாற்றில் முதன் முறையாக கத்தார் நாட்டு முன்னாள் மன்னர் ஒவ்வொருவருக்கும் 3,000 பிராங்குகள் வரை டிப்ஸ் கொடுத்து அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

எனினும், இது மருத்துவமனை கொள்கைகளுக்கு எதிரானது என்பதால், ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் 150 பிராங்க் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

எஞ்சிய தொகை மருத்துவமனையின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என ஆண்ட்ரியா ரிட்ஸ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY