காத்தான்குடி மீடியா போரத்தின் 16வது ஊடகவியலாளர்கள் மாநாடு!

0
315

காத்தான்குடி மீடியா போரத்தின் ஏற்பாட்டில் 16வது ஊடகவியலாளர்கள் மாநாடு காத்தான்குடி கடற்கரை ஜூமைறா பெலசில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 06.02.2016 அன்று மீடியா போரத்தின் தலைவர்  ஏ. எல்.டீன் பைறூஸ் தலைமையில் இடம்பெறவுள்ளது.

மேற்படி தினத்தில் உயர்தர மாணவர்கள் மற்றும் ஊடகத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கான “செய்தியாளர்களை உருவாக்குவோம்” எனும் தலைப்பில் சமூக வலைத்தளம் தொடர்பாகவும் அதன் சாதக பாதகங்கள், செய்தி எழுதுவதின் வடிவம், கட்டுரை, ஆக்கங்கள், கவிதை எழுதுவது எவ்வாறு போன்ற விடயங்களும் தற்போதுள்ள இணையத்தளங்களின் பயன்பாடுகள் தொடர்பாகவும் ஒரு நாள் பயிற்சி நெறி சிரேஷ்ட வளவாளர்களினால் இடம்பெறவுள்ளதுடன் இவர்களுக்கான சான்றிதழும் பயிற்சிநெறியின் முடிவில் வழங்கப்படவுள்ளது.

அத்துடன் அன்றைய தினம் இரவு 7.30 தொடக்கம் மாநாட்டு நிகழ்வு கடற்கரை ஜூமைறா பெலசில் இடம்பெறவுள்ளதுடன் பிரதம அதிதியாக புணர்வாழ்வு புணரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, விஷேட அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறுக், கௌரவ அதிதியாக முன்னாள் நகர சபை உறுப்பினர் எம்.எம். அப்துர் ரஹ்மான் உட்பட உலமாக்கள், வைத்தியர்கள், பொறியிலாளர்கள், சட்டத்தரணிகள், கல்விமான்கள், அமைப்புக்களின் தலைவர்கள் உட்பட பல முக்கிய அதிதிகள் கலந்து சிறப்பிக்கவுள்ளதுடன் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் கௌரவிப்பும் இடம்பெறவுள்ளது.

காத்தான்குடி மீடியா போரம் ஊடகப்பணி மாத்திரம் அல்லாது பிரதேசத்திற்கும் மக்களுக்கும் தேவையான பிரச்சினைகள் மற்றும் தேவைகளை முன்கொண்டுவரும் நிலையில் மேற்படி முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(எம்.எச்.எம். அன்வர்)

LEAVE A REPLY