மட்டக்களப்பில் ஆறு நாட்களுக்கு மின் வெட்டு!

0
420

இலங்கை மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் காரணமாக நாளை முதல் ஆறு நாட்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களில் மின்வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளதாக மாவட்ட மின் பொறியியலாளர் பணிமனை தெரிவித்துள்ளது.

காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையான காலப்பகுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ள பிரதேசங்கள் பற்றிய விபரங்கள் வருமாறு,

25ம் திகதி – ஆரையம்பதி, ராஜதுரைக்கிராமம், காங்கேயன்ஓடை, செல்வாநகர்

26ம் திகதி –கறுவாக்கேணி, கிண்ணையடி, கிரான், கோரகள்ளிமடு, சந்திவெளி, மொறக்கொட்டான்சேனை, சித்தாண்டி மற்றும் புலிபாய்ந்தகல்

27ம் திகதி – மிச்சிநகர், மீராக்கேணி, ஜின்னா வீதி, சவுக்கடி, தளவாய், புண்ணக்குடா, தைக்கா வீதி

28ம் திகதி – ஓட்டமாவடி, மாவடிச்சேனை, காவத்தாமுனை, மாஞ்சோலை

29ம் திகதி – கல்லடி, நாவற்குடா, மஞ்சந்தொடுவாய்

30ம் திகதி – திருமலை வீதி (தாண்டவன்வெளி – ஊறணி பகுதி), ஞானசூரியம் சதுர்க்கம், இருதயபுரம், ஊறணி

-VK-

LEAVE A REPLY