அவுஸ்திரேலியாவுக்கு படகில் பயணித்த 1,200 பேர் பலி; பெரும்பாலானோர் இலங்கையர்

0
179

2008ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவுக்கு படகு பயணங்களை மேற்கொண்ட அகதிகளில் 1,200 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் இலங்கை தமிழ் அகதிகள் என தென்னிந்தியாவுக்கான அவுஸ்திரேலிய துணை தூதுவர் ஷீன் கெலி தெரிவித்துள்ளார்.

2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மேற்கொள்ளப்படும் எல்லை இறையாண்மை நடவடிக்கை கீழ் உயிரிழப்புச் சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை எனவும் ஷீன் கெலி குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் குடியேற வீசா இன்றி படகுகள் மூலம் வரும் எவருக்கும் அங்கு குடியேறும் சாத்தியமில்லை என அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY