சுற்றுலா படகு மூழ்கி விபத்து: கோஸ்டா ரிகாவைச் சேர்ந்த 13 பேர் பலி

0
199

கரிபீயன் தீவு பகுதியில் சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 13 பேர் நீரில் மூழ்கி இறந்தனர்.

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான நிகரகுவா நாடு சுற்றுலாவுக்கு பெயர் பெற்றது. இந்நாட்டின் பிரதான நிலப்பகுதியில் இருந்து 70 கிமீ தொலைவில் உள்ள கோர்ன் தீவுப் பகுதிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்தப் பகுதியில் 32 சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற படகு பலத்த காற்று வீசியதால் கவிழ்ந்தது. இதில் படகில் பயணம் செய்த 13 பேர் நீரில் மூழ்கி இறந்தனர். அவர்கள் அனைவரும் கோஸ்டா ரிகா நாட்டைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

படகின் உரிமையாளரான கேப்டன் இந்த விபத்தில் உயிர் தப்பியுள்ளார். அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY