முஸ்லீம் காங்கிரஸ் தலைமையகத்தில் தேசிய ஜக்கிய தொழிலாளா் சேவக சங்கம் உதயம்

0
221

மறைந்த தலைவா் எம்.எச்.எம் அஷ்ரப் 1999ஆம் ஆண்டில் இவ்வாறு ஒரு அமைப்பை ஏற்படுத்தி ஒரு உள்ளங்கைக்குள் இலங்கை என்ற ஜக்கியத்தை கொண்ட ஒரு சின்னத்தினையும் ஏற்படுத்தியிருந்தாா். அவரின் அந்தக் கனவு 16 வருடங்களுக்குப் பிறகு இன்றுதான் நனவாகின்றது.

ஆனால் அந்தக் கனவினை தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபையின் செயற்பாட்டுப் பணிப்பாளராக கடமையாற்றுகின்ற மகிலால் சில்வாவின் முயற்சியினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டமைக்கும் இந்த புதிய நிர்வாக சபைக்கும் தனது நன்றியை தெரிவித்தாா் அமைச்சா் ரவுப் ஹக்கீம்.

இன்று(24) கொழும்பு – 2ல் உள்ள ஸ்ரீ.ல.மு. காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாத்தில் மேற்படி அமைப்பு ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு தலைவா் ரவுப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் புளத்சிங்கள தேரா், புரவசியபாய மற்றும் சிங்கள திரைப்பட கலைஞரும் பணிப்பாளருமான தர்மசிரி பண்டாரநாயக்க, நீர்விநியோக வடிகாலாமைப்புச் சபையின் உப தலைவா் சபீக் ரஜப்டீன், ராகுல் சிறிவா்ததன, கலாநிதி எம். விக்கிரமசிங்க ஆகியோரும் கலந்து கொண்டனா்.

இந் நிகழ்வில் நீர்விநியோக வடிகாலமைப்புச் சபை, இலங்கை துறைமுக அதிகார சபை, தொலைத்தொடா்பு, தெஹியத்தக் கண்டிய விவசாயிகள் அமைப்பு, உன்னஸ்கிரிய ஊழியா்கள் போன்ற பல்வேறு அமைப்புக்களின் தலைவா்கள் செயலாளா்கள் கலந்து கொண்டு உரிய விண்ணப்பங்களையும் அமைச்சர் ரவுப் ஹக்கீமிடம் பெற்றுக் கொண்டு சத்தியப்பிரமானம் எடுத்துக் கொண்டனா்.

இங்கு உரையாற்றிய அமைச்சா் ரவுப் ஹக்கீம்,

கடந்த காலங்களில் தொழிற்சங்கவாதிகள் பாலதம்பு, கொள்வின் ஆர். டி.சில்வா, ஏ.ஈ குணசிங்க போன்றோா்கள் எந்த ஒரு அரசியவாதிகளுக்கும் தலைசாய்க்காது தமது தொழிலாளர் வாக்கத்திற்காக ஒரு குறிக்கோளுடன் தமது சாகும்வரை செயற்பட்டு வந்தாா்கள்.

அவா்கள் நீதிமன்றத்திலும் கூட பாரிய சாவல்களுடன் தொழிலாா்கள் வா்கத்திற்காக வாதாடி வந்தாா்கள். முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவா்ததன கூட சட்டத்தரணிகளுக்கு வழங்கும் ஜானாதிபதி சட்டத்தரணி உயா் பதவிகளுக்கு சிபாரிசு செய்தும் அதனை பெற்றுக் கொள்ளாத ஒரு கொள்கைவாதிகள். ஆனால் இப்பொழுது சகல ஊழியா்கள் சங்கமும் தத்தமது அரசியல் கட்சிகளுக்கும், அமைச்சா்களுக்கும் தலைசாய்ந்து தோ்தல் காலத்தில் கூட ஒரு பக்க சாா்பாக நடந்து கொள்கின்றனா்.

இங்கு உரையாற்றிய புரவசிய பலய அமைப்பின் பிரநிதியும் சிங்கள சினிமா கலைஞா் தர்மசிறி பண்டாரநாயக்க இங்கு உரையாற்றுகையில், ”சிங்கள லேய” என புதிதாக அமைப்பு உருவாகியதையும் மீண்டும் ஒரு யுத்தத்தினை இவா்கள் விரும்புகின்றாா்களா இதற்கு அவா் எதிா்ப்பை தெரிவித்து உரையாற்றினாா்.

இந்த நாட்டில் காலத்துக்கு காலம் அரசியல் ரீதியாக இவ்வாறாக அமைப்பு உருவாகின்றது. இவ்வாறன அமைப்பை எற்படுத்தி இனரீதியாக ஆட்சியை அமைக்க நினைப்பவா்கள் ஒருபோதும் ஆட்சிக்கு வரமுடியாது.

இந்த நல்லாட்சியில் இவ்வாறான அமைப்புக்களின் செயற்பாடுகள் தொடா்ந்து நிலைக்காது. சகல இனங்களையும் இணைத்து தேசிய ஜக்கிய மாக கொண்டு செல்லும் கட்சியினால் மட்டுமே ஆட்சியை கைப்பற்ற முடியும்.

இன ரீதியாக சிங்கள லே எனவும் தேசியக் கொடியில் இரண்டு சிறுபாண்மையினது அடையாளத்தை எடுத்துவிட்டு தேசியக் கொடியுடன் வலம் வருபவா்கள் கனவு இந்த நாட்டில் புதிய ஜனாதிபதி பிரதமா் ஆட்சியில் நீடிக்காது.

இதே போன்று தான் கடந்த ஆட்சிக்காலத்தில் கிரீஸ் ஜக்கா எனும் ஒரு அமைப்பினை உருவாக்கினாா்கள். இது சிறுபான்மையினா் வாழும் பிரதேசத்திலேயே ஏற்படுத்தப்பட்டது. இதற்காக 30 பொலிஸ் வாகனத்தினைக்கூட பொதுமக்கள் தீயிட்டனா். இன்னும் இந்த ஜக்காகவை பொலிசாா் கண்டுபிடிக்காமல் இருப்பது மா்மமாகவே உள்ளது என  அங்கு உரையாற்றினாா்.

-அஷ்ரப் ஏ சமத்

38dd3309-b4fd-4509-b99e-30e6dd03c368 690ade98-9733-41c4-b3de-c2d585ac407b 5166179c-712c-46de-9635-1bee2e8986f8 a1bfc5e7-9c21-4c30-8ca0-2723c497b836 c0ad0a1d-f47b-43b5-b74f-920f605eb5d1 d41c59f2-c99b-47d0-b381-072742b922d8

LEAVE A REPLY