காத்தான்குடியில் வர்த்தக நிலையத்தை உடைத்து கொள்ளை

0
384

காத்தான்குடி கபுறடி வீதியிலுள்ள பிரபல வர்த்தக நிலையமொன்றை உடைத்து நாலரை இலட்சம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் நேற்றிரவு இடம் பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த வர்த்தக நிலையத்தின் முன் பகுதியை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், பணப்பெட்டியை உடைத்து நாலரை இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுத் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிசார் மற்றும் சொகோ விசேட பொலிஸ் பிரிவினர் ஆகியோர் மோப்ப நாய்களின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டனர்.

காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

katankudi_ro_001 katankudi_ro_010

LEAVE A REPLY