ஏறாவூர் நகர விபத்து: நகரசபை கண்காணிப்புக் கமெராவில் பதிவு

0
284

மட்டக்களப்பு கொழும்பு நெடுஞ்சாலையில் ஏறாவூர் நகரசபைக்கு முன்பாகவுள்ள பாதசாரிக் கடவையில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்துப் பற்றி ஏறாவூர் நகரசபையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கமெராவில் பதிவாகியுள்ளதாக நகரசபைச் செயலாளர் எம்.எச்.எம். ஹமீம் தெரிவித்தார்.

பாதசாரிக் கடவையில் கண்மூடித்தனமாக மோட்டார் சைக்கிளை அதிவேகமாகச் செலுத்திச் சென்று பாதசாரிகளான தாய் மீதும் அவரது 6 வயதான சிறுவன் மீதும் மோதியிருப்பது நகரசபைக் கண்காணிப்புக் கமெராவில் பதிவில் தெரிவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கமெரா பதிவை ஆதாரமாக வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் ஒரு சிறுவன் என்றும் மோட்டார் சைக்கிள் செலுத்தும் அனுமதிப் பத்திரம் பெறும் வயதெல்லையைக் கூட அவர் அடைந்திருக்கவில்லை என்றும் தெரியவந்திருக்கின்றது.

இந்த விபத்தில் ஏறாவூர் மீராகேணியைச் சேர்ந்த வெள்ளத்தம்பி செய்த்தூன் (வயது 37) மற்றும் அவரது மகனான ஏ.எச். இஹ்ஸான் (வயது 06) ஆகியோரே படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

அப்துல்லாஹ்

LEAVE A REPLY