நீர் தடாகத்தில் விழுந்து 48 வயது நஜீம் என்பவர் வபாத்

0
321

DSC08956திருகோணமலை -ரொட்டவெவ பகுதியில் நீர் தடாகத்தில் (பக்கி) விழுந்து மூன்று பிள்ளைகளின் தந்தை நேற்று (23) மாலை உயிரிழந்துள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை -ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த எம்.கே. நஜீம் (48 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து மனைவியான பௌசுல் இனாயா தெரிவிக்கையில்,

சிறியளவில் காய்ச்சல் காணப்பட்டதாகவும் கணவர் பகல் உணவை சாப்பிட்டு விட்டு தூங்கி விட்டு வீட்டுக்கு பின்னால் உள்ள பக்கியில் முகம் கழுவச் சென்றவர் வீட்டுக்குள் வரவில்லை. அதனையடுத்து சென்று பார்த்த வேளை பக்கிக்குள் விழுந்து கிடப்பதை அவதானித்ததாகவும் பொலிஸ் வாக்கு மூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சட்ட வைத்திய அதிகாரியான ஹரித தென்னகோன் சடலத்தை சோதனையிட்டார். நீர் அதிகளவில் குடிபட்டிருப்பதால் உயிரிழப்புக்கு காரணம் எனவும் தெரிவித்தார்.

மேலதிக விசாரணைகளை மொறவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(அப்துல்சலாம் யாசீம்)

LEAVE A REPLY