எரிபொருள் விலை குறைவால் விமானக் கட்டணம் குறைப்பு!

0
542

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவிற்குக் குறைந்துள்ள நிலையில், சர்வதேச அளவிலான விமானக் கட்டணம் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. ரூபா 88 ஆயிரமாக இருந்த பிரிட்டிஷ் ஏயார்லைன்ஸின் டில்லி நியூயோர்க் விமானக் கட்டணம் தற்போது ரூபா 64 ஆயிரமாக குறைந்துள்ளது.

அதேபோல் முன்னணி விமான சேவை நிறுவனங்களான கட்டார், எமிரேட்ஸ், எடிஹாத் உள்ளிட்ட நிறுவனங்கள் அதிரடி விலைக் குறைப்பை அறிவித்துள்ளன. உலக அளவில் குறைந்த விமானக் கட்டணம் வசூலிப்பதில் இந்தியா, மலேசியா, தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளதாக சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

மேலும் சமீபத்தில் இந்தியாவில் விமானத்தில் செல்லும் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துவருவதாகவும் ஒரு தகவல் உள்ளது. இந்நிலையில் கட்டணக் குறைப்பு மேலும் பலரைக் கவர்ந்திழுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் பயணிகளுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டன. இதுபோல் இன்னும் சலுகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளதா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY