மைக்ரோன் 20 இற்கும் குறைவான பொலித்தீன் பாவனைக்கு எதிராக அடுத்த மாதம் முதல் கடும் சட்டம் அமுல்

0
222

மைக்ரோன் 20 இற்கும் குறைவான எடையுடைய பொலித்தீன் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு எதிராக எதிர்வரும் முதலாம் திகதி முதல் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஜனவரி முதலாம் திகதி முதல் மைக்ரோன் 20 இற்கும் குறைவான எடையுடைய பொலித்தீன் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் லால் தர்மசிறி குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய சட்டத்திற்கு முரணாண வகையில் பொலித்தீன் விற்பனையில் ஈடுபடுவோர் குறித்து சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது உடனடியாக பொலித்தீன் விற்பனையை நிறுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து வர்த்தகர்கள் அறிவித்துள்ளதாகவும், எனினும் இம்மாதம் மாத்திரம் அதற்கான கால அவகாசம் கோரப்பட்டதாகவும், திடீரென தண்டம் அறிவிட வேண்டாம் எனவும் வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய பொலித்தீன் விற்பனை குறித்த சட்டம் எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் கடுமையாக நடைமுறைப்படுத்தபடவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அதற்கமைய இந்த சட்டத்தை மீறுவோருக்கு எதிராக 10,000 ரூபா தண்டப்பணம் அறிவிடப்படுவாகவும் இரண்டு வருடத்திற்கு குறையாத சிறைத்தண்டனை பெற்றுக்கொடுக்கபடும் எனவும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் லால் தர்மசிறி சுட்டிக்காட்டியுள்ளார்.

-NF-

LEAVE A REPLY