பாகிஸ்தானில் திடீர் நில நடுக்கம்: பொதுமக்கள் பீதியில் வீதிகளில் தஞ்சம்

0
205

பாகிஸ்தானில் கைபர் பக் துங்வா மாகாணத்தில் நேற்று திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் புனர், மலாகண்ட், ஸ்வாட் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளிகளாக பதிவானது. அது அஷ்காசாமுக்கு 13 கி.மீ. மேற்கில், 90.7 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறி உள்ளது. ஆனால் ஆப்கானிஸ்தான்-தஜிகிஸ்தான் எல்லையில் 80 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக பாகிஸ்தான் வானிலை ஆராய்ச்சி துறை கூறுகிறது.

இந்த நில நடுக்கத்தில் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை என பாகிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறி உள்ளது.

இருந்தபோதிலும் நில நடுக்கத்தை உணர்ந்த மக்கள் பீதியில் வீடுகளை, அலுவலகங்களை, இன்னும் பிற கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில், திறந்தவெளி மைதானங்களில் தஞ்சம் புகுந்தனர்.

LEAVE A REPLY