சுயதொழில் முயற்சியாளர்களுக்கான தொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன

0
197

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் வாகரை பிரதேச செயலக பிரிவில் தும்பு உற்பத்தி பயிற்சி, சிப்பி அலங்கார கைப்பணிப் பொருள் உற்பத்தி பயிற்சி, உணவு உற்பத்தி பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்வதற்காக பயிற்சிகளைப் பெற்ற பயனாளிகளுக்கு வெள்ளிக்கிழமை வாழ்வாதார தொழிலுபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இதன்படி தும்புக் கைத்தொழிலை மேற்கொள்ளப் பயிற்சியளிக்கப்பட்ட 24 பேருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உபகரணத் தொகுதியும், சிப்பி அலங்காரப் பொருளுற்பத்திக்காக 25 பேருக்கு தலா 30 ஆயிரம் மற்றும் உணவு தயாரிப்புக்காக பயிற்சியளிக்கப்பட்ட 14 பேருக்கும் தலா 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உபகரணங்களும் இலவசமாக வழங்கப்பட்டன.

பிரதேச செயலாளர் எஸ்.ஆர். ராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ். கங்காதரன், ஐநா அபிவிருத்தி நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் எம். பார்த்தீபன், பிரதேச செயலக ஏற்றுமதி அபிவிருத்தி கைத்தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். ஜுட் கொடுதோர் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ. காண்டீபன் உட்பட தன்னார்வ தொண்டு நிறுவனப் பிரதிநிதிகளும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

அப்துல்லாஹ்

2da4b4b9-4a72-4ca5-8d66-48376820c8e0 b9bdaa40-ec2d-44d8-9be1-4b4dca104ca1 dc7c84f4-ec5a-47de-8914-29c90aff3ab5

LEAVE A REPLY