அமெரிக்காவில் போக்குவரத்தை முடக்கிய பனிப்புயல்: இரண்டு நாட்களில் 7600 விமானங்கள் ரத்து

0
193

அமெரிக்காவில் வீசி வரும் பனிப்புயல் காரணமாக இரண்டு நாட்களில் 7600 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் அங்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. தலைநகர் வாஷிங்டனில் கடும் பனிப்புயல் வீசுகிறது. இதனால் சாலைகள், வீட்டு கூரைகள் மற்றும் மாடிகளில் பனி கொட்டுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கடும் பனிப்புயல் வீசுவதால் வாஷிங்டன் உள்பட கிழக்கு கடற்கரை நகரங்களுக்கான விமான போக்குவரத்து முடங்கியுள்ளது. நேற்று 3500 விமானங்களும், இன்று 4100 விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாக விமான கண்காணிப்பு சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சுமார் 15 சதவீத விமானங்கள் இயக்கப்படவில்லை. நாளை பிற்பகல் வர்த்தக விமானங்களை இயக்க முடியும் என விமான நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

இதற்கிடையே, பனிப்புயல் பாதிப்பை தவிர்க்கும் வகையில் அனைத்து முக்கிய விமான நிறுவனங்களும் பயணிகளுக்கு பயணச் சலுகையை வழங்கி உள்ளன. பனிப்புயலை தவிர்க்கும் வகையில் முன்கூட்டியே புறப்பட்டுச் செல்லும் அல்லது தாமதமாக செல்லும் விமானங்களில் மறுபடியும் முன்பதிவு செய்துகொள்ள அனுமதி அளித்துள்ளது

LEAVE A REPLY