நேபாளத்தில் புதிய அரசியலமைப்பு பிரகடனத்தில் சட்டத்திருத்தம்: பாராளுமன்றத்தில் வாக்குப்பதிவு

0
180

நேபாளத்தில் புதிய அரசியலமைப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்த சர்வதேச சமுதாயம் ஆதரவு அளிக்கும் என துணை பிரதமர் கமால் தாபா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில், கடந்த செப்டம்பர் மாதம் 20-ம்தேதி புதிய அரசியலமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த புதிய அரசியலமைப்பின்படி, நேபாளம் 7 மாகாணங்களாக பிரிக்கப்பட்டது. ஆனால் புதிய அரசியலமைப்பில் தங்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதாக மாதேசி, தாரு உள்ளிட்ட பழங்குடி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாதேசி மக்களின் தொடர் போராட்டத்தில் இதுவரை சுமார் 55 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொந்தளிப்பான அரசியல் சூழ்நிலை ஏற்பட்டதையடுத்து, போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேபாளத்தில் புதிய அரசியலமைப்பு பிரகடனத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வர இன்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த சட்டத்திருத்தம் மாதேசி சமூகத்தினரின் தொடர் போராட்டங்களுக்கு முடிவு காணும் வகையில் செய்யப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவான சட்ட உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

சட்டத்திருத்தம் முழுமையாக இல்லை என்றும் தங்களது கோரிக்கைகள் பிரதிபலிக்கப்படவில்லை என்றும் வெளிநடப்பு செய்தவர்கள் குற்றம்சாட்டினார்.

LEAVE A REPLY