தாறுல் ஹிக்மா கலாபீடத்தின் வருடாந்த இஸ்லாமிய கலாச்சார மற்றும் கௌரவிப்பு நிகழ்வுகள்!

0
230

மத்தியமுகாம், சவளக்கடை தாறுல் ஹிக்மா கலாபீடத்தின் வருடாந்த இஸ்லாமிய கலாச்சார மற்றும் கௌரவிப்பு நிகழ்வுகள் தாருல் ஹிக்மா கலாபீடத்தின் அதிபர் ஏ.சீ.தஸ்தீக் மதனி தலைமையில் நேற்று மாலை கலாபீட வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஐ.எல்.எம்.மாஹிர், சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், முன்னாள் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் ஏ.கே.அப்துல் சமட், மருதமுனை தாறுல் ஹூதா மகளிர் அரபுக் கல்லூரி முதல்வர் எம்.எல்.முபாறக் மதனி, தாறுல் ஹிக்மா கலாபீடத்தின் தலைவர் ஏ.சீ.அன்வர், பள்ளிவாசல் தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது தாறுல் ஹிக்மா கலாபீடத்தில் ஆரம்ப கல்வியை கற்று மௌலவி பட்டம் பெற்றவர்கள், பல்கலைக்கழகம் தெரிவானவர்கள், 2015ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், தாறுல் ஹிக்மா கலாபீடத்தில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கும் பரிசில் வழங்கப்பட்டது.

எம்.எம்.ஜபீர்

LEAVE A REPLY