விவசாய வாழ்வாதார உதவிகளை மேற்கொள்வதற்கான கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்கின் ஆய்வுக் களவிஜயம்.

0
228

காத்தான்குடி பிரதேசங்களில் விவசாய வாழ்வாதார உதவிகளை மேற்கொள்வதற்காக வீட்டுத்தோட்டம், பாரம்பரிய உணவு உற்பத்தி, சிறு கைத்தொழில், பழவகை உற்பத்தி போன்றவற்றை மேம்படுத்துவதற்காக அதற்குப் பொருத்தமான பயனாளிகளை தெரிவுசெய்து அதனூடாக வறுமை கோட்டின்கீழ் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் முதல்கட்டமாக இன்று சனிக்கிழமை (23.01.2016) காத்தான்குடி அப்றார் நகர் பகுதிக்கு ஆய்வுக் கள விஜயமொன்றினை கிழக்கு மாகாணசபை உறுப்பினர்  ஷிப்லி பாறூக்  மேற்கொண்டு அப்பிரதேசத்திலுள்ள நிலைமையை நேரில் கண்டறிந்தார்கள்.

இவ் ஆய்வுக் களவிஜயத்தின் போது கருத்துதெரிவித்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர், ஷிப்லி பாறூக் வறுமைகோட்டின் கீழ் அதிகமான மக்கள் வாழ்கின்றனர், அதில் அதிகமானோர் நோய்நொடிகளிலாலும், மற்றும் இன்னோரன்ன பிரச்சினைகளாலும் அவதியுற்றுக்கொண்டும் அடிப்படை வசதிகள் அற்ற நிலையிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த வகையில் அரசாங்கத்தினூடாக ஒரு குறிப்பிட்ட சில உதவிகளைகொண்டு இவற்றை உடனடியாக தீர்ப்பதற்கு முடியாது என்பது ஒரு வெளிப்படையான உண்மையாகும். ஆகவே தனிப்பட்ட ரீதியாக நமது சமூகம் சார்பாக சில உதவிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அந்த வகையில் இன்று இப்பிரதேசத்திற்கு விஜயம் செய்து இங்குள்ள நிலைமையை கண்டறிந்துள்ளோம்.  இம்மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்துவதற்காக விவசாயத் திட்டத்தினூடாக பல வாழ்வாதார திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம், மேலும் இப்பிரதேசத்தின் உட்கட்டுமான தேவைகளையும் எதிர்காலத்தில் நிவர்த்தி செய்வதற்கு முயற்சிகளை மேற்கொள்வேன் என தெரிவித்தார்.

LEAVE A REPLY