கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் 2வது இரத்ததான முகாம்!

0
209

மட்டக்களப்பு மாவட்டத்தின், கல்குடாத்தொகுதியில் அமைந்துள்ள சமூகசேவை நிறுவனமான கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனம் ”உதிரம் கொடுப்போம் உயிர்களைக்காப்போம்” எனும் தொனிப்பொருளிலான 2வது இரத்ததான முகாம் ஒன்றை 2016.01.23ஆந்திகதி (சனிக்கிழமை) மட்-மம-மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் காலை 09.00 – 03.00 மணிவரை நடாத்தியது.

இவ்இரத்ததான நிகழ்வானது கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவரும், மட்-மம-மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபருமான ஏ.எம். அன்வர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் வைத்திய அதிகாரி டொக்டர் ஜே. பெர்னான்டோ தலைமையிலான வைத்தியசாலை குழுவினர் கலந்துகொண்டனர்.

இவ்இரத்ததான முகாமில் பொதுமக்கள், அரச அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் விளையாட்டுக்கழகங்களின் உறுப்பினர்கள் என 79ற்கும் மேற்பட்ட நல்லுல்லங்கொண்டவர்கள் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கினர்.

இவ்இரத்ததான நிகழ்வை சிலர் தடுப்பதற்கு பல முயற்சிகளையும் மேற்கொண்டதோடு மிகவும் சிரமத்திற்கும், இன்னல்களுக்கும் மத்தியில் அல்லாஹ்வின் உதவியுடன் இவை அனைத்தையும் தகர்த்தெரிந்து மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது அல்ஹம்துலில்லாஹ்

LEAVE A REPLY