(Photo) யாழ்ப்பாணத்தில் நில அதிர்வு!: மக்கள் மத்தியில் பெரும் பதற்ற நிலை

0
135

யாழ்ப்பாணத்தின் சில பிரதேசங்களில் இன்று அதிகாலை சிறியளவிலான அதிர்வு உணரப்பட்டுள்ளது.

அச்சுவேலி மற்றும் நவகிரி பகுதிகளில் அதிகாலை 2 மணியளவில் நிலத்தில் அதிர்வு உணரப்பட்டுள்ளதாக  செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் யாழ் மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ். ரவியிடம் வினவியபோது, அதிகாலை அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த அதிர்வின் காரணமாக அச்சுவேலி பகுதியில் சுமார் 300 மீற்றர் நீளத்திற்கு நிலத்தில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதுதொடர்பில் தேசிய கட்ட்ட ஆய்வு நிறுவகத்திற்கு அறிவித்துள்ளதுடன், நிலைமையைப் பார்வையிடுவதற்காக தமது உத்தியோகத்தர்களை சம்பவ இடத்திற்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையத்தின் யாழ் மாவட்ட உதவிப் பணிப்பாளர் கூறினார்.

அச்சுவேலி மற்றும் நவகிரி பகுதிகளிலுள்ள வீடுகளில் மக்களால் அதிர்வு உணரப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

-NF-

jaffna_nilanatukkam01 jaffna_nilanatukkam03 jaffna_nilanatukkam05 jaffna_nilanatukkam06 jaffna_nilanatukkam07 jaffna_nilanatukkam08

LEAVE A REPLY