புனித சிசிலியா பெண்கள் கல்லூரி தேசிய பாடசாலைக்கு போட்டோ பிரதி இயந்திரம் அன்பளிப்பு!

0
290

பிரான்ஸ் நாட்டின் சென் மாண்டே மாநகரத்தினால் 2004ம் ஆண்டு சுனாமி அணர்த்தத்தின் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் ‘எதிர்காலத்திற்கு ஒரு புண்ணகை’ எனும் அமைப்பினால் 2005ம் ஆண்டு தொடக்கம் 2015ம் ஆண்டு வரை மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரி தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் சுனாமியால் பாதிக்கப்பட்ட 30 மாணவிகளுக்கு கடந்த 10 வருடங்களாக பல்வேறு கல்விசார் உதவிகளை வழங்கி வந்தது.

மேற்படி திட்டத்தின் நிறைவாக மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரி தேசிய பாடசாலை மாணவிகளின் நன்மை கருதி போட்டோ பிரதி இயந்திரம் கையளிக்கும் நிகழ்வு 21-01-2016 நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை இப் பாடசாலை அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன் போது இலங்கையில் எதிர்காலத்திற்கு ஒரு புண்ணகை அமைப்பின் பிரதிநிதிகளால் குறித்த போட்டோ பிரதி இயந்திரம் சிசிலியா பெண்கள் கல்லூரி தேசிய பாடசாலை அதிபர் அருட்சகோதரி அருள் மரியாவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிராண்ஸ் நாட்டின் சென் மாண்டே மாநகரத்தினால் ஆரம்பிக்கப்பட்ட ‘இலங்கையில் எதிர்காலத்திற்கு ஒரு புண்ணகை’ அமைப்பின் பிரதிநிதிகள், மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரி தேசிய பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் உள்ளிட்டோர் பலரும் கலந்து கொண்டனர்.

சுனாமி அணர்த்தத்தின் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் எதிர்காலத்திற்கு ஒரு புண்ணகை அமைப்பு கடந்த 10 வருடங்களாக மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரி தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் சுனாமியால் பாதிக்கப்பட்ட 30 மாணவிகளுக்கு பல்வேறு கல்விசார் உதவிகளை வழங்கி தற்போது அந்த திட்டத்தை நிறைவு செய்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பழுலுல்லாஹ் பர்ஹான்

LEAVE A REPLY