(Poem) குறுக்கு வழிகள்

0
91

ask-questionதேன்பாணி விற்கிறார்
தெருவின் முனையில்
அம்பாணி ஆக
அவசரம் அதனால்
லொத்தரின் பின்னால்
பித்தனாய் அலைகிறார்
உள்ள உழைப்பையும்
மெல்ல இழக்கிறார்.

சூட்கேஸில் வைத்து
சோப்பு விற்கிறார்
பில் கேட்ஸாய் ஆகும்
பெரிய ஆசையில்
லண்டனில் ஓடும்
கண்டவன் குதிரைக்கு
தண்ட பணத்தை
தாரை வார்க்கிறார்

தவிடு யாவாரம்
தம்பி பண்ணுறார்
அவ்டியில் போக
அடியில ஆசை
சவுதிக்கு வேலைக்கு
சம்சாரத்தை அனுப்பி
அவதிப் படுகிறார்
அவசரம் உழைக்க.

உப்புமா கிளரி
ஊர்ல யாவாரம்.
ஒபாமா போல
உயர ஆசை.
இருக்கிற காசை
எலக்‌ஷனுக்கு கட்டி
தெருவில நிற்கிறார்
தேர்தலில் தோல்வி.

புருணை சுல்தானாய்
பொருள் சேர்க்க ஆசை
கருணை இன்றி
கடத்துறார் கஞ்சாவை
தருணம் பார்த்து
தம்பி மாட்டினால்
இருப்பதும் போகும்
எலும்பும் நோகும்.

இறைவன் தந்ததை
இன்புடன் ஏற்போம்
குறுக்கு வழிகளை
குழியினில் புதைப்போம்
பெருக்கிற செல்வம்
பிழையின்றி இருக்க
பொறுமையாய் உழைப்போம்
அருமையாய் வாழ்வோம்.

(Mohamed Nizous)

LEAVE A REPLY