லொறியும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து; இருவர் காயம்

0
289

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் நேற்று (22) வெள்ளிக்கிழமை மாலை லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் இருவர் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே காயமடைந்த நிலையில் மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் இருந்து மண்முனைப் பக்கமாக பணித்த லொறி முச்சக்கர வண்டியோடும் மோட்டார் சைக்கிளோடும் மோதுண்டதால் இவ்விபத்து ஏற்பட்டது.

கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(அப்துல்லாலஹ்)

DSC08862 DSC08866 DSC08883

LEAVE A REPLY