அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்தனவின் இறுதிக் கிரியைகள் இன்று!

0
214

மறைந்த திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சருமான ஏம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்தனவின் இறுதிக்கிரியைகள் இன்று (23) 2 மணிமுதல் கந்தளாய் லீலாரத்ன விளையாட்டரங்கில் பூரண அரச மரியாதையுடன் நடைபெறவுள்ளது.

1989 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தல் மூலம் திருகோணமலை மாவட்டத்திலிருந்து பாராளுமன்றம் நுழைந்த இவர் பின்னர் நடைபெற்ற தேர்தல்களிலும் வெற்றி பெற்று திருகோணமலை மாவட்ட மக்களுக்கு அளப்பரிய சேவைகளை ஆற்றியுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன அவர்களின் வெற்றிக்காக தம்மை அர்ப்பணித்ததுடன் அண்மையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஜக்கிய தேசியகட்சியின் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் நுழைந்து காணி மற்றும் காணி அமைச்சர் அமைச்சரவை அந்தஸ்த்து அமைச்சராகவும் செயற்பட்டார்.

திருகோணமலை மாவட்டத்தின் முதலாவது அமைச்சரவை அமைச்சர் என்ற பெருமை இவரையே சாரும்.

LEAVE A REPLY