(CCTV Video) மஞ்சட் கடவையை கடந்த தாயும் மகனும் விபத்து; ஏறாவூரில் சம்பவம்

0
540

Eravur yellow line accidentஏறாவூரில் இன்று (22) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் தாயும் மகனும் காயமடைந்த நிலையில், ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏறாவூரைச் சேர்ந்த வெள்ளைத்தம்பி செய்த்தூன் (வயது 36), ஏ.எச்.இஸ்ஹான் (வயது 06) ஆகியோரே விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

ஏறாவூர் நகர சபைக்கு முன்பாகவுள்ள மஞ்சள் கோட்டுக் கடவையைக் கடக்க முற்பட்டபோது, வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்து ஏறாவூர் நகரசபை CCTV கமராவில் பதிவாகியுள்ளது. இதோ அந்த காட்சி

LEAVE A REPLY