காங்கேயனோடை பிர்லியன்ட் சமூக அமைப்பின் சேவைகள் பாராட்டத்தக்கது: பதுர்தீன்

0
230

மட்டக்ளப்பு மத்தி காத்தான்குடி கல்விக் கோட்டத்திற்குட்பட்ட காங்கேயனோடை அல்-அக்ஸா மகா வித்தியாலயத்தில் காங்கேயனோடை பிர்லியன்ட் சமூக அமைப்பின் சுமார் 1 இலட்சம் செலவில் அமைக்கப்பட்ட பாடசாலையின் ஒரு பகுதி சுற்று மதில் உத்தியோக பூர்வமாக இன்று காலை கையளிக்கப்பட்டது.

அமைப்பின் தலைவர் ஏ.எல்.எம்.சிறாஜ் தலைமையில் இடம் பெற்ற வைபவத்தில் பிரதம அதிதியாக பிரதேச கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன் கலந்து கொண்டார். இதன் போது பாடசாலை முதல்வர் எம்.ஜ.அப்பாஸ் நழிமியிடம் பிர்லியன்ட் சமூக அமைப்பின் சுமார் 1 இலட்சம் செலவில் அமைக்கப்பட்ட பாடசாலையின் ஒரு பகுதி சுற்று மதில் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.

வைபவத்தில் பிரதேச முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பிர்லியன்ட் சமூக அமைப்பின் உறுப்பினர்களும் பங்கேற்றனர். இவ் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதேச கல்விப்பணிப்பாளர் பதுர்தீன் தெரிவித்தார்.

முகம்மட் சஜீ

LEAVE A REPLY