மாடு அறுப்பதில் எந்த முடிவும் எடுக்கவில்லை :ஜனாதிபதி தெரிவித்தது அவருடைய கருத்து

0
243

இறைச்சிக்காக மாடுகள் அறுப்பதை தடை செய்ய அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இது தொடர்பில் ஜானாதிபதி தனது கருத்தையே வெளியிட்டிருந்தார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இறைச்சிக்காக மாடு அறுப்பதை நிறுத்தவேண்டும் எனவும் தேவையானால் வெளிநாட்டில் இருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்ய வேண்டும் எனவும் பயாகல பகுதியில் நடந்த நிகழ்வொன்றில் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பில் வினவியதற்கு பதிலளித்த அமைச்சர்,

முஸ்லிம்கள் குர்பான் நிறைவேற்றுவதற்காக மாடு அறுக்கிறார்கள். மாடு அறுப்பது தொடர்பில் ஜனாதிபதி தனது கருத்தை வெளியிட்டுள்ளார். ஆனால் அரசாங்கம் அவ்வாறு எந்த முடிவும் எடுக்கவில்லை . அமைச்சரவையிலும் அது பற்றி ஆராயப்படவில்லை. இது தொடர்பில் முஸ்லிம் அமைச்சர்கள் எவரும் அமைச்சரவையில் எதுவும் பேசவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

-Thinakaran-

LEAVE A REPLY