கிழக்கின் சக்தி – ஆளுநர் நடமாடும் சேவை

0
208

கிழக்கு மாகாண ஆளுநர் ஓஸ்டின் பொர்ணாந்து தலைமையில் கிழக்கு மாகாண ஆளுநர் செயலகமும் அம்பாறை மாவட்ட செயலகமும் ஒருங்கிணைந்து நடாத்தும் கிழக்கின் சக்தி – ஆளுநர் நடமாடும் சேவை ஜனவரி மாதம் 24ம் திகதி (ஞாயிறு) மு.ப. 9.00 மணி முதல் பி.ப 3.00 மணி வரை அம்பாறை டீ.எஸ்.சேனநாயக்க தேசிய பாடசாலையில் நடைபெற உள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மிகத் தொலைவிலிருந்து ஆளுநரை சந்திப்பதற்கு திருகோணமலைக்கு வருகைதரும் மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு மக்களின் பிரதேசங்களுக்குச் சென்று அவர்களை சந்திக்கும் நோக்கில் இந் நடமாடும் சேவையினை கிழக்கு மாகாண ஆளுநர் செயலகமும் அம்பாறை மாவட்ட செயலகமும் இணைந்து ஒழுங்கு செய்துள்ளதோடு, இதில் கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம, கிழக்கு மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழு, கிழக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் உள்ளிட்ட 50 இற்கும் மேற்பட்ட திணைக்களங்கள் பங்குபற்றவுள்ளன.

இதன்போது மாகாண அலுவலகங்களுக்கு மேலதிகமாக ஆட்பதிவுத் திணைக்களம், ஓய்வூதியத் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, தெங்கு அபிவிருத்தி அதிகார சபை மற்றும் ஹிங்குரான சீனித் தொழிற்சாலை போன்ற பொது மக்களுக்கும் அரச அலுவலர்களுக்கும் அத்தியாவசியமான அலுவலகங்கள் ஓரே இடத்தில் ஒன்றிணைக்கப்பட்டு சேவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக உடற்கூற்றுப் பரிசோதனைகள், இலவச பற்சிகிச்சை முகாம்கள், ஆயூள்வேத, யூனானி மற்றும் சித்த வைத்திய சேவைகள் என்பவற்றை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பொதுமக்களுக்குரிய விசேட போக்குவரத்து வசதிகள் வழங்குவதற்கும் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் மாகாண போக்குவரத்து அதிகார சபை ஆகியவற்றின் மூலம் ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திலும் இவ்வாறானதொரு ஆளுநர் நடமாடும் சேவை எதிர்காலத்தில் நடாத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எம்.ஐ.அப்துல் நஸார்

LEAVE A REPLY