உரிய ஆசிரியர் நியமிக்க கோரி ஓட்டமாவடி ஷரீப் அலி வித்தியாலய பெற்றார், மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

0
262

ஓட்டமாவடி மட் ஷரீப் அலி வித்தியாலயத்தில் நிலவும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான உரிய ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்க கோரி பெற்றார், மானவர்கள் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வருடம் புலமைப்பரிசில் பரீடசைக்கு 141 மாணவர்கள் தோற்றவுள்ளனர். இவர்களை நான்கு வகுப்புக்களாக தரப்படுத்தப்பட்டு கல்வி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வருடம் மேற்கொள்ளப்படும் வருடாந்த இடமாற்றத்தின் அடிப்படையில் ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் இருந்து அதன் ஊட்டப்பாடசாலைகளில் ஒன்றான ஷரீப் அலி வித்தியாலயத்திற்கு புலமைப்பரிசில் பரீட்சை வகுப்புக்கு கற்பிக்க கூடிய அனுபவமுள்ள மூன்று ஆசிரியர்களை பெற்றுக்கொள்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் குறைந்தது இருவரையாவது தருவதாக அதிகாரிகள் மட்டத்தில் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

என்ற போதும் அனுபவமுள்ள ஒருவரே வழங்கப்பட்டதாகவும், மற்றைய ஆசிரியர் ஆரம்ப பாடசாலை ஆசிரியர் நியமனம் பெற்று கடந்த ஐந்து வருடங்களாக உயர்தர வகுப்புக்களை நடாத்தியவர் என்பதனால் புலமைப்பரிசில் வகுப்பினை நடாத்துவதற்கு போதிய தயார் படுத்தலுக்கு கால அவகாசம் போதாமல் காணப்படுவதாக பெற்றொர் கருதுகின்றனர்.

எனவே குறித்த ஆசிரியருக்கு பதிலாக தேர்ச்சியுடைய ஆசிரியரை நியமித்து தர கோரி பெற்றார் வலய கல்விப்பணிமனைக்கு எழுத்துமூலம் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் அதற்கு எவ்வித தீர்வும் கிடைக்காத நிலையில் பெற்றார் கதவடைப்பு போராட்டத்தை நடாத்தியதாக குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை ஐந்தாம் தர நான்காவது வகுப்பில் கல்வி பயிலும் 22 மாணவர்கள் எழுத்து, வாசிப்பு திறன்களில் கூட மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுவதாக பெற்றோர் கருத்து தெரிவிக்கின்றனர்.இதற்கு அடிப்படைக்காரணம் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் ஆசிரியர் பிரச்சிணை தொடர்ந்து காணப்படுவதும், பாடசாலை தலைமை ஆசிரியர் கண்காணிப்பில் உள்ள தவறுகளுமே காரணமாக அமைவதுடன் அதிபரே இம்மாணவர்களுக்கு பொறுப்புச்சொல்ல வேண்டும் என பெற்றோர் குறிப்பிடுகின்றனர்.

ஓட்டமாவடி ஷரீப் அலி வித்தியாலயத்தில் தற்போது 670 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். தரம் ஐந்து வரை காணப்படும் இப்பாடசாலையில் இருந்து இம்முறை முதன் முதலாக புலமைப்பரிசில் பரீட்சைக்கு மானவர்கள் தோற்றவுள்ளனர்.

அத்தோடு இப்பாடசாலையில் ஒரே ஒரு நிரந்தர கட்டடம் அமைக்கப்பட்டு நான்கு வகுப்புக்கள் மாத்திரமே இதில் இயங்குகின்றன. ஏனைய 14 வகுப்புக்களும் தற்காலிக கொட்டில்களில் இயங்குவதுடன் போதிய இடவசதி இன்மை, சுகாதாரப்பிரச்சினை, உள்ளிட்ட பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன. கற்பித்தலுக்கான உரிய வகுப்பறைச்சூழல் காணப்படாமை பல சவால்களை தோற்றுவித்துள்ளதாக ஆசரியர்களும் பெற்றோர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.

02c4180a-5dfc-44af-afb0-7cc22cabd313 915f90ad-b20a-40c2-a9f8-52fc2a037fea cdc45e99-c7f4-4f71-a759-164ae10db34b

LEAVE A REPLY