நூற்றாண்டுக்கு முன் அழிந்ததாக நம்பப்பட்ட தவளை இந்தியாவில் கண்டுபிடிப்பு

0
194

ஒரு நூற்றாண்டுக்கு முன்பாகவே அழிந்துவிட்டதாகக் நம்பப்பட்ட மரத் தவளை ஒன்று இந்தியாவில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தவளையை வட கிழக்கு இந்தியக் காடுகளில் இந்திய உயிரியல் விஞ்ஞானியான சத்தியபாமா தாஸ் பிஜுவும் அவரது குழுவினரும் கண்டுபிடித்துள்ளனர்.

1870இல் பிரிட்டிஷ் விலங்கியலாளரான தோமஸ் ஜெர்தோன் இந்த வகைத் தவளை ஒன்றை கண்டறிந்தார். இதனால், இந்தத் தவளைக்கு பாலிபிடேட்ஸ் ஜெர்தோனி என்று பெயர் சுூட்டப்பட்டது.

தற்போது இந்தத் தவளைகள், சீனா முதல் தாய்லாந்து வரையிலான பகுதிகளில் இருப்பதாக நம்பப்படுகிறது. இருந்தபோதும், இந்தத் தவளைகள் குறித்து ஆய்வுசெய்யப்பட்டதில், இவற்றை புதிய இனமாகவே வரையறுக்கலாம் என தெரியவந்துள்ளது.

தரையிலிருந்து சுமார் 6 மீற்றர் உயர்த்திற்கு மேல் அமைந்திருக்கும் மரத் துளைகளில் இந்த மிகச் சிறிய தவளைகள் வசிக்கின்றன. இதன் காரணமாகவே இத்தனை ஆண்டுகளாக அவை கண்டுபிடிக்கப்படாமல் இருந்துள்ளன.

இந்தப் பகுதியில் மிகக் குறைவான விஞ்ஞானிகளே ஆராய்ச்சி செய்வதால் இவை கண்டறியப்படாமல் இருந்திருக்கலாம் என வேறு சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

(Thinakaran)

LEAVE A REPLY