அகதிகளின் வருகையை தடுக்க வேண்டும்: உலக பொருளாதர கூட்டத்தில் பேசிய ஜேர்மனி ஜனாதிபதி

0
189

சுவிசில் நடந்த உலக பொருளாதர கூட்டத்தில் அகதிகளின் வருகையை குறைக்க வேண்டியது அவசியமானது என்று ஜேர்மனி ஜனாதிபதி ஜோசிம் கவுக் தெரிவித்துள்ளார். உலக பொருளாதரம் மற்றும் அரசியல் கூட்டம் சுவிசின் Davosல் நடைபெற்றது.

இதில் பேசிய ஜேர்மனி ஜனாதிபதி ஜோசிம் கவுக், “ஐரோப்பிய நாடுகளின் அகதிகள் வருகையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது அரசியல் ரீதியாக அவசியமான ஒன்றாக உள்ளது.

இதன் மூலம் தீவிரவாத அச்சுறுத்தலையும் எளிதில் தடுக்க முடியும். அகதிகளின் வருகையை குறைப்பது என்பது சிறந்த நெறிமுறையில்லை. அதே சமயம் அவர்கள் சமூகத்தின் நிலையை உணர்ந்து அதற்கு உதவ வேண்டும்.

அதேவேளை அகதிகளாக வருபவர்களுக்கு தேவையான அனைத்தும் செய்து கொடுக்க வேண்டியதும் முக்கியமானது.

இது போன்ற காரணங்களாலே இரண்டாம் உலகப்போரில் இருந்து அகதிகள் தொடர்பான பிரச்சனைகள் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கு பெரும் சிக்கலான தொடர்ந்து வருகிறது” என்று கூறியுள்ளார்.

மேலும், ஜேர்மனியில் பேசிய ஜோசிம் கவுக், ’அகதிகள் வருகையை குறைக்க இந்த ஆண்டு முதல் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக’ தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY