ஹலால் விழிப்புணர்வு கருத்தரங்கு காத்தான்குடியில்…

0
214

இலங்கை ஹலால் சான்றுறுதிப் பேரவை நாடளாவிய ரீதியில் ஹலால் விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடாத்திவருகின்றன நிலையில் அதன் மற்றுமொரு கருத்தரங்கு நிகழ்வு காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நாளை வெள்ளிக் கிழமை (22) இரவு 7.30 மணி தொடக்கம் இரவு 10.00 மணிவரை நடைபெற இருப்பதாக அதன் காத்தான்குடி பிரதிநிதி மௌலவி எம்.ஐ.எம். முஸ்தகீம் அஹமட் (பலாஹி) தெரிவித்தார்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டு உற்பத்தி பொருட்களில் ஹறாம் ஊடுருவல் மிக நூணுக்கமாக இடம் பெறுவதனை அண்மைக்காலமாக அவதானிக்க கூடியதாக உள்ளது.

எனவே, இவற்றினை மக்களுக்கு தெளிவுபடுத்துவது, விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடாத்துவது என்பது மிக மிக அவசியம் என்பதால் மேற்படி கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஹலால் சான்றுறுதிப் பேரவையின் பயிற்றுவிக்கப்பட்ட ஹலால் பிரதிநிதி மௌலவி எம்.ஐ.எம். முஸ்தகீம் அஹமட் (பலாஹி) தெரிவித்தார்.

எனவே, மேற்படி கருத்தரங்கில் சகல தரப்பினரும் கலந்து கொண்டு பயன் பெறுவதோடு ஏனைய சகோதரர்களையும் அழைத்து வருமாறு அன்புடன் வேண்கின்றனர் ஏற்பாட்டுக் குழுவினர்.

(ஏ.எல். டீன்பைரூஸ்)

LEAVE A REPLY