தரம் 5 புலமைப் பரிசில்: கொழும்பு பாடசாலைகளுக்கு திருத்தப்பட்ட வெட்டுப்புள்ளிகள்

0
200

கொழும்பு மாவட்டத்தின் சில பிரபல பாடசாலைகளுக்கு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான திருத்தப்பட்ட வெட்டுப் புள்ளிகளை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கொழும்பு ரோயல் கல்லூரியில் தரம் 6 ற்காக மேலதிக வகுப்பொன்று ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, மாவட்டத்திலுள்ள 7 பாடசாலைகளுக்கான வெட்டுப் புள்ளிகளை ஒரு புள்ளியால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ரோயல் கல்லூரிக்கான வெட்டுப் புள்ளியாக 183 புள்ளிகளும், ஆனந்தா கல்லூரிக்கு 180 புள்ளிகளும், நாலந்தா கல்லூரிக்கு 178 புள்ளிகளும், டி.எஸ்.சேனாநாயக்கா கல்லூரிக்கு 176 புள்ளிகளும், இசிபத்தன கல்லூரிக்கு 173 புள்ளிகளும், தர்ஸ்டன் கல்லூரிக்கு 171 புள்ளிகளும் மகாநாம கல்லூரிக்கு 169 புள்ளிகளும் பன்னிப்பிட்டிய தர்மபால கல்லூரிக்கு 172 புள்ளிகளும் திருத்தப்பட்ட வெட்டுப் புள்ளிகளாக கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளன.

-NF-

LEAVE A REPLY