வை.எல்.எஸ். ஹமீட் இனால் தாக்கல் செய்யப்பட்ட தடை உத்தரவுக்கு நீதிமன்றம் மறுப்பு

0
242

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் அவர்களால் தற்போது செயலாளர் நாயகமாக தெரிவு செய்யப்பட்ட அல்ஹாஜ் சுபைதீன் அவர்களின் தெரிவை இரத்துச் செய்ய வேண்டுமெனக் கோரியும் நடைபெற்று முடிந்த பேராளர் மாநாட்டை சட்டரீதியற்றதாக்க வேண்டுமெனகோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு நீதிபதியினால் தடை உத்தரவு நிராகரிக்கப்பட்டது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எவ்வித பிரச்சனையும் இன்றி எதிர்காலத்தில் மக்கள் கட்சியாக வீரரை போட்டு செல்லுமென்று அகில இலங்கை மக்கள் ககாங்கிரஸின் தவிசாளரும் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சருமாகிய அமீர் அலி தெரிவித்தார்.

கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் தடை உத்தரவு நிராகரிக்கப்பட்ட மகிழ்சியோடு நீதிமன்ற வளாகத்தில் இருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் ரிஷாத் பதியுத்தீன், தவிசாளர் அமீர் அலி, பொருளாலர் ஹூஸைன் பைலா கட்சியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி றுஸ்தி ஹபீப் , கட்சியின் உயர் பீட உறுப்பினர்களான முபாரக் மெளலவி மற்றும் ஹில்மி மஹ்றுப் ஆகியோர் வெளியேறும் போது.

(எம்.எஸ்.எம். றிஸ்மின்)

IMG-20160121-WA0012 IMG-20160121-WA0017

LEAVE A REPLY