மாடறுப்பை ஜனாதிபதியால் தடை செய்ய முடியாது; ஹக்கீம் விடமாட்டார்: ராவணா பலய

0
285

இலங்­கையில் மாடுகள் அறுப்­பது முற்­றாக இல்­லாமற் செய்­யப்­பட வேண்­டு­மென்ற ஜனா­தி­ப­தியின் கருத்து வர­வேற்­கத்­தக்­கது. ஆனால் ஜனா­தி­ப­தி­யினால் இதனைச் செய்ய முடி­யாது.அவ­ருடன் இருக்கும் அமைச்சர் ஹக்கீம் போன்­ற­வர்கள் இதற்கு இட­ம­ளிக்க மாட்­டார்கள் என ராவணா பலய அமைப்பின் செய­லாளர் இத்­தே­கந்த சத்­தா­திஸ்ஸ தேரர் தெரி­வித்­துள்ளார்.

இலங்­கையில் மாடுகள் அறுப்­பது தடை­செய்­யப்­ப­டு­வது மாத்­தி­ர­மல்ல வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து இறைச்சி இறக்­கு­ம­தியும் தடை செய்­யப்­பட வேண்டும் என்­பதே ராவணா பல­யவின் நிலைப்­பா­டாகும் என்றும் கூறினார்.

நாட்டில் மாடுகள் அறுப்­பது தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வெளி­யிட்­டுள்ள கருத்து தொடர்பில் ராவணா பல­யவின் நிலைப்­பாட்­டினை விளக்­கு­கை­யிலே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில்,
இலங்­கையில் மாடுகள் அறுப்­பது தடை செய்யப்பட வேண்­டு­மென தொடர்ந்து பல வரு­டங்­க­ளாக ராவணா பலய வலி­யு­றுத்தி வரு­கி­றது.

கடந்த அர­சாங்­கத்தின் ஆட்சிக் காலத்தில் அப்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவிடம் மாட­றுப்­ப­தற்கு எதி­ராக நாம் மகஜர் ஒன்­றி­னையும் சமர்ப்­பித்தோம். மக­ஜரில் ஒரு இலட்­சத்­துக்கும் மேற்­பட்டோர் கையொப்­ப­மிட்­டி­ருந்­தனர்.

எதிர்ப்பு ஊர்­வ­லங்­க­ளையும் நடத்­தினோம். ஆனால் மஹிந்த ராஜபக் ஷ எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை.

மஹிந்த ராஜபக் ஷவின் அர­சாங்­கத்­திலும் ஹக்கீம் உட்­பட முஸ்லிம் அமைச்­சர்கள் இருந்­தார்கள். அவர்கள் எதிர்ப்புத் தெரி­வித்­ததால் மஹிந்த ராஜபக் ஷ எது­வித நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை.

கடந்த வாரம் பயா­க­லையில் நடை­பெற்ற இந்­துக்­களின் பொங்கல் விழா­விலே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இவ்­வா­றான கருத்­தினை வெளி­யிட்­டுள்ளார். மாடு­களை இந்­துக்கள் தெய்­வ­மாக வணங்­கு­கி­றார்கள்.

அதனால் இந்து மக்­களின் ஆத­ர­வினைப் பெற்றுக் கொள்­வ­தற்­கா­கவே ஜனா­தி­பதி இவ்­வாறு கருத்துத் தெரி­வித்­துள்ளார்.

உண்­மையில் அவர் மாடுகள் அறுப்­பதை தடை­செய்­யப்­போ­வ­தில்லை.

ஜனா­தி­பதி மாடுகள் அறுப்­பதை நிறுத்த வேண்­டு­மெனத் தீர்­மா­னித்தால் பொலிஸ்மா அதிபர் மூலம் சகல பொலிஸ் நிலை­யங்­க­ளுக்கும் சுற்றுநிருபம் மூலம் அறி­வித்து உட­ன­டி­யாகத் தடை­செய்­யலாம். தடை­யுத்­த­ர­வினை பொலிஸார் அமுல்­ப­டுத்­து­வார்கள்.

இதை­வி­டுத்து வெறு­மனே கூட்­டங்­களில் அல்­லது விழாக்­களில் கருத்து தெரி­விப்­பதன் மூலம் எவ்­வித பயனும் ஏற்­ப­டப்­போ­வ­தில்லை.

இந்­துக்கள் மாடு­களை தெய்­வ­மாக வணங்­கு­கி­றார்கள். பௌத்தர்கள் மாடுகளை ‘கிரி அம்மா’ வாக பராமரிக்கிறார்கள்.

அதனால் மாடுகள் அறுப்பது தடைசெய்யப்பட வேண்டும்.

அதனுடன் சேர்த்து மாட்டிறைச்சி இறக்குமதியும் தடைசெய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ராவணா பலய இருக்கிறது என்றார்.

(Vidivelli)

LEAVE A REPLY