சீனாவில் 6.1 ரிக்டர் அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

0
190

சீனாவின் மத்திய பகுதியில் 6.1 ரிக்டர் அளவிற்கு பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க புவியியல் மையம் வெளியிட்டுள்ள தகவல்படி, கிங்காய் மாகாணம் மென்யுவான் கவுண்டியில் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது. நேற்றிரவு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பலர், தங்கள் காரிலேயே உறங்கியதாக நிலநடுக்க பாதிப்பை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

LEAVE A REPLY