காத்தான்குடி பிரதான வீதி வடிகான்களினால் சுகாதார பிரச்சினை; அதிகாரிகள் கவனிப்பார்களா?

0
282

காத்தான்குடி பிரதான வீதி பஸ் நிலையத்தினை அன்மித்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வடிகான்களில் கழிவு நீரும் குப்பை களும் தேங்கி காணப்படுவதால் பயணிகளும் பாதசாரிகளும் பாரிய சிரமத்திற்கு முகம் கொடுத்துவருவதோடு சுகாதார பிரச்சினைகளுக்கும் ஆளாகின்றனர்.

காத்தான்குடி யில் இருந்து இலங்கையின் அனைத்து பாகங்களுக்கும் செல்லும் பயணிகளின் முக்கிய கேந்திரமாக இவ் பஸ் நிலையம் காணப்படுவதுடன். வர்த்தக வியாபார முக்கிய இடமாகவும் இப் பிரதான வீதி காணப்படுகிறது.

இவ் வடிகானில் இருந்து வெளிவரும் தூர் நாற்றத்தினால் வியாபார நிலையங்களில் பணிபுரிபவர்கள், வாடிக்கையாளர்கள் பாரிய சுவாசப் பிரச்சனைகளுக்குள்ளாகி வருவதோடு பிரதான பாடசாலைகள் மற்றும் குர் ஆன் மத்றஸாகளுக்கு இவ் வீதியால் பயணிக்கும் மாணவர்கள் சுகாதார ரீதியாகவும் மன ரீதியாகவும் பாரிய சிரமத்தை எதிர் நோக்கி வருகின்றனர்.

எனவே மக்களின் இப் பாரிய பிரச்சினைக்கு காத்தான்குடி நகர சபை செயலாளர், பிரதேச செயலாளர், சுகாதார அதிகாரிகள் உடனடியாக தீர்வை பெற்றுத்தருமாறு மக்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கிறோம்.

(ஜுனைட் எம்.பஹ்த்)

DSC_1390 DSC_1391 DSC_1393 DSC_1394 DSC_1395

LEAVE A REPLY