நாலக கொடஹேவா உள்ளிட்ட மூவருக்கும் பிணை

0
167

பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரான நாலக கொடஹேவாவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

நாலக கொடஹேவாவுடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தம்மிக பெரேரா மற்றும் ரொனி இப்ராஹீம் ஆகிய இருவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை, சந்தேகநபர்களான மூவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

5 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று ரொக்கப் பிணையிலும் 50,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப்பிணையிலும் இவர்கள் மூவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

தனது பதவிக் காலத்தில் இளைஞர்களுக்கான நாளைய அமைப்புக்கு 50 இலட்சம் ரூபா நிதி வழங்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நாலக கொடஹேவா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

கடந்த ஜனவரி மாதம் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நாலக கொடஹேவா பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவர் பதவியை இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

(அத தெரண)

LEAVE A REPLY