தும்புக் கைத்தொழிலை மேற்கொள்ள உபகரணங்கள் வழங்கி வைப்பு!

0
193

மட்டக்களப்பு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அம்பிளாந்துறை மத்தி தும்பு பயிற்சி நிலையத்தில் விசேட பயிற்சி பெற்ற 22 பெண் பயனாளிகளுக்கு அவர்கள் தமது வாழ்வாதாரத்தை தேடிக் கொள்வதற்காக சுய தொழில்களை மேற்கொள்ளும் வகையில் உபரகணங்கள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (19.01.2016) அம்பிளாந்துறையில் இடம்பெற்றது.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் உதவியுடன் சுமார் 45000 ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் 22 பயனாளிகளுக்குமாக வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் அலுவலர்கள், பிரதேச செயலக கைத்தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட இன்னும் பல அதிகாரிகளும் பயனாளிகளான பெண்களும் கலந்து கொண்டனர்.

அப்துல்லாஹ்

LEAVE A REPLY