(Article) வீழ்ச்சியை நோக்கிச்செல்லும் கல்குடாவின் ஆரம்ப கல்வி!

1
360

முன்னைய அரசின் புதிய கல்வித்திட்டத்தின் கீழ் ஆயிரம் பாடசாலைகள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. உயர்தர பாடசாலைகளுக்கு தரமானதும் தகுதியானதுமான மாணவர்களை வழங்குவதற்கும் தரமான ஆரம்ப பாடசாலைகளை உருவாக்குவதும் இலக்காகக் கொண்டதாக இத்திட்டம் அமுழ்ப்படுத்தப்படுவதாக அப்போது குறிப்பிடப்பட்டது.

இவ்வகையில் கல்குடா தொகுதியின் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட சில உயர்தர பாடசாலைகளும் இத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டது.

உள்வாங்கப்பட்ட பாடசாலைகளின் ஊட்டப்பாடசாலைகளாக புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப பாடசாலைகள் அமையுமெனவும் அப்பாடசாலைகளை வளங்கொண்ட பாடசாலைகளாக்கும் விட நிதி ஒதுக்கீடு செய்யப்படுமெனவும் மாகாண கல்விப்பணிப்பாளரினால் அப்போது தெரிவிக்கப்பட்டது.

ஆனால் குறிப்பிடப்பட்டது போன்று போதிய நடவடிக்கைகள் மாகாண மட்டத்திலோ அல்லது தேசிய அரசு மட்டத்திலோ மேற்கொள்ளப்படாமையினால் மாவட்டத்தின் பல தமிழ் முஸ்லிம் பாடசாலைகள் இத்திட்டத்திளிருந்து தம்மை விடுவித்துக்கொண்டன.

சில போதிய வளங்களை அரசியல் மற்றும் உள்ளூர் உதவிகளைக்கொண்டு நிவர்த்தி செய்து கொண்டன. ஆனால் கல்குடா தொகுதியில் மட்டும் போதிய விழிப்பூட்டல் இன்மையால் இரண்டும் கெட்டான் நிலைக்கு இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட பாடசாலைகள் தள்ளப்பட்டுள்ளன.

பொதுவாக இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட பாடசாலைகள் சிறுவர் சினேக பாடசாலை என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றது. மாணவர்களுக்கான கல்விச்சூழல், உடல்விருத்திக்கான விலையாட்டுச்சூழல், பாதுகாப்பு மற்றும் சுகாதார சூழல் என்பன இப்பாடசாலைகளில் அமையப்பெற வேண்டும் என்பது அடிப்படை அம்சங்களாகும். ஆனால் மேற்குறிப்பிடப்பட்ட எவ்வித அம்சங்களும் நிவர்த்திக்கப்படாமல் இப்பாடசாலைகள் இயங்கிவருவது சிறந்த உடல் உள ஆரோக்கியமுள்ள மாணவர்களை உருவாக்குவதற்கு தடையாக அமையும்.

பௌதீக ரீதியான பிரச்சினைகள்:
மேற்குறித்த பாடசாலைகள் பலவும் போதிய பௌதீக வளங்களை கொண்டதாக அமைந்திருக்கவில்லை என்பதனை அவதானிக்க முடிகின்றது. போதிய இடப்பரப்பு இல்லாததனால் மிகக்குறுகிய நிலத்துண்டுக்குள் தற்காலிக கொட்டில்களும், நெரிசலான கட்டடங்களும் அமைக்கப்பட்டு கல்விச்செயற்பாடு நடைபெருகின்றது. உதாரணமாக மட்ஃமத்ஃ~ரீப் அலி வித்தியாலய பாடசாலையின் முதலாம் ஆண்டிற்கான வகுப்புக்கள் அருகிலுள்ள பழைய பள்ளிவாசல் கட்டடத்தில் இயங்குகிறது. தலையை தட்டும் உயரத்தில் இலங்கை அரசினால் தடை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்ற கூறை சீட்கள் வெப்பத்தினை தாராளமாக உள்ளிளுத்துக்கொள்கின்றன. காற்றை பெருவதற்கான எவ்வித ஜன்னல் வசதிகளும் காணப்படவில்லை.

இது பற்றி குறிப்பிடும் ஆசிரியர் ஒருவர் பிள்ளைகளுக்கு முன்னர் தனக்கு நோய் வந்திவிடும் போல் இருக்கின்றது எனக்குறிப்பிடுகின்றார். இவ்வாரே தாருல் உலூம் பாடசாலை வகுப்புகள் இரண்டு வௌ;வேறு இடங்களில் அமைக்கப்பட்டு அடைத்த அறைக்குள் மாணவர்களுக்கான கல்வியினை வழங்கி வருகின்றது. மட்ஃமத்ஃ~ரீப்; அலி வித்தியாலய பாடசாலையின் முதலாம் ஆண்டிற்கான வகுப்புக்களில் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் திறை போன்று சுவர்கள் அமையப்பெற்றுள்ளதனால் மானவர்கள் அனைவரையும் தமது நேரடிக்கண்காணிப்பில் வைத்திருப்பது சாத்தியமற்றதாக காணப்படுகின்றது.

இவ்வனைத்துப்பாடசாளைகளிலும் மாணவர்களின் விலையாட்டுச்செயற்பாட்டிற்கான திறந்த களம் எங்கும் காணப்படவில்லை. ஒரு குறித்த ஒரு பாடசாலைக்கு சென்று பார்வையிட்ட போது உள்ளக விளையாட்டரங்கு போல் ஓர் அறைக்குள் மாணவர்கள் துள்ளிக்குதித்து விளையாட முற்படுவதும் இடம் இல்லாமையினால் வெளியில் இருக்கின்ற பாதைக்கு ஓடிவர முற்வடுவதும் கவலையளிப்பதாக அமைந்தது.

இவ்விடப்பிரச்சினை காரணமாக சில பாடசாலைகளின் வகுப்பறைகளில் 42 பிள்ளைகளுக்கும் மேல் காணப்படுகின்றனர். இதனால் கற்றல் செயற்பாட்டில் 30 அல்லது 35 மாணவர்களுக்கு மேல் ஒரு வகுப்பில் கற்பிப்பது முடியாத காரியமாக உள்ளதாக ஒரு ஆசிரியர் கருத்து தெரிவித்தார். இவ்வனைத்துப்பாடசாளைகளிலும் விலையாட்டுச்செயற்பாடுகல் சூன்யமாகவே காணப்படுகின்றது. இம்மாணவர்களின் விளையாட்டுத்திறன், உடற்பயிற்சி செயற்பாடுகள் உள்ளிட்ட திறைமைகள் திட்டமிட்டு அழிக்கப்படும் ஒன்றாக அமைகின்றது.

சுகாதார கேடுகள்:
ஒரே அறைக்குள் பாடசாலை வந்தது முதல் பாடசாலை விட்டுச்செல்லும் வரை குண்டாஞ்சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போன்று மாணவர்கள் அமர்ந்திருப்பதும், போதிய காற்றோட்டம் மற்றும் வெளிச்ச வசதிகள் காணப்படாமையும் நோய் தொற்றுக்கள் இலகுவாக இடம்பெற வாய்ப்பாக அமையும்.

குறித்த ஒரு பாடசாலையின் வகுப்பறையை அடுத்த சுவர்ப்பகுதியில் கழிவறை காணப்படுவது சுகாதார ரீதியில் கேடுவிலைப்பதாகவே அமையும். தகரத்தினால் வேயப்பட்ட கூறைகளும், அஸ்பனேட் சீட் மூலம் வெய்யப்பட்ட கூறைகளும் வெப்பகாலத்தில் வெப்பத்தை உள்ளிளுப்பது போன்று தென்னை ஓலைகளால் வெய்யப்பட்ட கூறைகளினால் மழைநீர் பாதிப்பும் ஏற்படுவதை தடுக்க முடியாத நிலை காணப்படுகின்றது.

பாடசாலை முகாமைத்துவ பிரச்சினைகள்:
மேற்குறிப்பிட்ட பாடசாலைகள் இடப்பற்றாக்குறை காரணமாக வௌ;வேறு இடங்களில் அமையப்பருவதால் முகாமைத்துவ பிரச்சினைகள் ஏற்படுகின்றது. தாருல் உலூம் பாடசாலை மூன்று இடங்களில் தற்போது இடம்பெறுகின்றது. பாடசாலை அதிபர் பாடசாலையை கண்காணிப்பதற்காக வேண்டி பைசிக்களிலேயே காலத்தை கழிக்க வேண்டி ஏற்படும். இவ்வாறு சில பாடசாலைகள் காணப்படுகின்றது.

அத்தோடு பாடசாலைக்கு வருகை தரும் ஆசிரியர்கள் தாம் ஒரு இடத்தில் வரவினைப்பதிவு செய்துவிட்டு வேறு இடத்திற்கு வகுப்பறைக்காக செல்ல வேண்டி இருப்பதுடன் பாடசாலை முடிவு நேரத்தில் மீண்டும் காரியாலயம் செல்ல வேண்டி இருப்பதாக குறிப்பிடுகின்றனர்.

சிலவேளை ஆசிரியர் ஒருவர் பாடசாலைக்கு வருகை தராதபோது அதிபர் அவ்வகுப்பினை நடாத்துவதாயின் ஏனைய வகுப்பக்களை கண்காணிக்க முடியாமல் ஆகிவிடும் அல்லது அவ்வகுப்பினை கலைத்துவிடவேண்டும் என்ற தெரிவுக்குள் தள்ளப்படுகின்றார்.

உறிய ஆசிரியர் பற்றாக்குறை:
குறித்த பாடசாலைகளில் உறிய ஆசிரியர் நியமனங்கள் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படுகின்றது. உதுமான் வித்தியாலயத்தில் ஆங்கில ஆசிரியர் நியமனம் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதே போன்று ~சரீப் அலி வித்தியாலயத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு பயிற்று விக்கப்பட்ட ஆசிரியருக்கான வெற்றிடத்தினால் மானவர்கள் பாதிப்புற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வழங்கப்பட்டுள்ள ஆரம்பப் பிரிவு ஆசிரியர்கள் சிலர் புலமைப்பரிசில் பரீட்சைக்கு கற்பிப்பதில் தயக்கம் காட்டுவதுடன் சிலர் புலமைப்பரிசில் பரீட்சைக்கு கற்பித்த எவ்வித அனுபவமும் கொண்டவர்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதே போன்று சாஹிரா வித்தியாலயம் உள்ளிட்ட பாடசாலைகள் தமது ஆசிரியர் பற்றாக்குறை குறித்து கவலை தெரிவிக்கின்றன.

இந்நிலைக்கு யார் பொருப்புதாரிகள்:
மேற்குறித்த அனைத்து பிரச்சினைகளும் சமூகமயப்படுத்தப்படாமல் அமுக்கப்பட்டுள்ள போதும் இவற்றிற்கான காரணிகளை கண்டறிந்து செயற்படுவது காலத்தேவையாகும். பெற்றோர்களைப்பொருத்தவரையில் தமது பிள்ளைகளுக்கு எவ்வாறாவது கல்வியை கொடுக்கவேண்டும் என்ற ஆர்வத்தில் குறித்த பாடசாலைகளில் முண்டியடித்துக்கொண்டு சேர்த்து விடுகின்றனர்.

ஆனால் பாடசாலையின் பௌதீக மற்றும் கல்விச்செயற்பாட்டு வளங்கள் குறித்து கூடுதலாக சிந்திப்பதாக தெரியவில்லை. தாய்ப்பாடசாலைகள் கதவடைப்புக்களை செய்வதனால் மாற்றொழுங்குகளுக்காக பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதற்காக வேண்டி பல ஆயிரம் ரூபாக்களை செலவு செய்து பொருளாதார சிரமங்களை எதிர்கொள்வதுடன் உரிய வளமின்றி செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். குறித்த பாடசாலைகளின் பிரச்சினைகள் குறித்தோ அல்லது அதற்கான சரியான தீர்வு குறித்தோ போதிய வழிகாட்டல்கள் வழங்கப்படவில்லை. கல்வி கொடுப்பது போன்றே பிள்ளைகளது உள சுகாதார அம்சங்களும் மிக முக்கியமானது என்பதனை கருத்தில் கொள்ள மறந்து விடுகின்றனர்.

அதிபர்களது வகிபாகம்:
உண்மையில் இத்தகைய கையறு நிலைக்கு அதிபர்களும் சிலபோது வகை சொல்லியே ஆக வேண்டியுள்ளது. பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்க்கின்றபோது தமது பாடசாலைக்கு வழங்கப்பட்ட கையகப்பகுதிக்குள் (கெட்ச்மண்ட் ஏரியா) இருந்து மாத்திரம் மாணவர்களை உள்வாங்குகின்ற போது இடப்பற்றாக்குறை தொடர்பான பிரச்சினைகளுக்கும் ஆசிரியர் பற்றாக்குறைப் பிரச்சினைக்கும் தீர்வினை இலகுவாக கண்டு கொள்ள முடியும்.

ஆனால் இடங்களிலிருந்து முறையற்ற வகையில் மாணவர் சேர்ப்பினை மேற்கொள்கின்றபோது பல்வேறு பிரச்சினைகளும் தோன்றுவதனை காணமுடிகின்றது. பிரச்சினைகள் வந்தபின்னர் மாத்திரம் இல்லாமல் வருமுன்னரே பாடசாலை செயற்திட்டம் தொடர்பில் சமூக அமைப்புக்களுடன் நெருங்கிய உறவுகொண்டு கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் போது பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வினை கண்டிருக்க முடியும்.

வளைய, மகாண கல்விப்பனிப்பாளர்களது செயற்பாடுகள்:

உண்மையில் இப்பாடசாலைகளின் இன்றைய நிலைக்கு வளைய, மாகாண கல்விப்பணிப்பாளர்களும் காரணமாக அமைவதனை காணமுடிகின்றது. ஏனெனில் ஒருபாடசாலையின் அமைவிடம், சுற்றுச்சூழல் வசதி, ஆசிரிய வளம் குறித்த தெளிவு காணப்பட வேண்டும். மேற்படி அனைத்துப்பிரச்சினைகளும் காணப்படும் போது இத்தகைய அதிகாரிகள் எந்த தீர்வினை முன்வைத்துள்ளார்கள் என்பது கேள்விக்குறியாகவுள்ளது.

குறித்த பல பாடசாலைகளுக்கு முறையான கட்டட அனுமதிகூட பிரதேச சபை வழங்கப்படாத நிலையில் வலயக்கல்வி பணியகம் எத்தகைய மாற்று நடவடிக்கை எடுத்துள்ளது என்பது பெற்றோர்கள் அறிந்த விடயமே. குறைந்த பட்சம் தகுதியான திறமையான அதிபர்களை நியமனம் செய்ய முடியாத நிலையில் அதிகாரிகள் செயற்படுவது கவலையளிக்கின்றது.

தீர்வு எங்கே:
குறிப்பிடப்பட்ட பல்வேறு பிரச்சினைகள் எமது மாணவ செல்வங்களின் எதிர்காலத்தை சூன்யமாக்கிவிடும் நிலை காணப்படுகின்றது. இந்தவகையில் குறித்த பிரச்சினைகளுக்கு அவசர மற்றும் நீண்ட தீர்வு காணப்படவேண்டிய தேவை சமூகத்தளத்தில் உள்ள அனைவருக்கும் உள்ளது. இவற்றில் சில விடயங்களின் சாதகத்தன்மை குறித்து கலந்தாலோசிப்பது பொருத்தமாக அமையும்.

பௌதீக, ஆசிரிய மற்றும் ஏனைய வளப்பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பாடசாலைகளை இனம்கண்டு அவற்றினை அதன் தாய் பாடசாலையின் ஆள்புல எல்லையில் ஓர் பகுதியாக பிரித்து நடாத்த முடியும். சில உயர்தர பாடசாலைகளில் ஐந்தாம் வகுப்பு வரையில் நீக்கப்பட்டுள்ளதால் காலியாகவுள்ள கட்டடங்களை பயன்படுத்த முடியும். அதே போன்று ஊட்டப்படசாலையாக நடாத்துவது சாத்தியமற்றது என கருதும் பட்சத்தில் மீண்டும் தாய்ப்பாடசாளையுடன் இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

இவற்றுக்கெல்லாம் மேலாக நீண்ட காலத்திட்டமாக புதிய தரமான போதிய வளம் கொண்ட ஆரம்ப பாடசாலை ஒன்றை உருவாக்குதல். இதற்காக தற்போது போதிய இட வசதிகொண்ட பாடசாலை ஒன்றை ஆரம்ப பாடசாலையாக மாற்றியமைத்தல் அல்லது புதிய இடப்பரப்பு ஒன்றில் பாடசாலையை உருவாக்குதல். இதற்கான காணியினை தற்போது இப்பகுதியில் செயலற்றுக்கிடக்கும் காகித ஆலைக்கு வழங்கப்பட்டுள்ள காணியில் போதிய பரப்பினை பெற்றுக்கொள்ள முடியும். இதுவும் கட்டமான விடயமாக அமையாது. ஏனெனில் குறித்த ஆலை பிரதேச அரசியல் வாதிகளின் தலைமைகளுக்கு சொந்தமான அமைச்சின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்க விடயம். அல்லாத விடத்து மாற்று காணிகளை பெற்றுக்கொள்ள முயற்சிக்க முடியும். இவ்விடயத்தில் ஊர் சமூக அமைப்புக்கள், உள்ளூர் அரசியல் தலைமைகள், புத்திஜீவிகள் அவசர சந்திப்புக்களை மேற்கொண்டு சரியான தீர்வினைப் எற்றுக்கொள்ள முயற்சிப்பது காலத்தேவையாகும்.

ஜுனைட் நளீமி

1 COMMENT

  1. அவசியமான பதிவு. பதிவை பிரசுரிக்க முன் எழுத்துப்பிழைகளை சரி பார்த்தால் இன்னும் சிறப்பு. எழுத்துப்பிழைகள் முழு ஆக்கத்தையும் படிக்கும் மனவோட்டத்தை நிறுத்திவிடும்.

LEAVE A REPLY