மாடறுப்பு விவகாரம்: முஜிபுர் ரஹ்மானின் கருத்து

0
341

“கடந்த காலங்களில் இனவாதிகள் முஸ்லிம்கள் மீது காழ்புணர்வு கொண்டு எழுப்பிய கோசங்களில் பிரதானமாக மாடறுப்பு விவகாரம் இருந்து வந்தது. அவர்கள் முஸ்லிம்களை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவும் இன முரண்பாடுகளை தோற்றுவிக்க வேண்டும் என்பதற்காகவுமே மாடறுப்பு விவகாரத்தை பூதாகரமாக்கினர்.

புதிய ஆட்சி ஏற்படுத்தப்பட்டதன் பின்னர் இவ்விவகாரம் ஓரளவு தனிந்திருந்தது. மீண்டும் அதற்கான ஆரம்ப புள்ளியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே வைத்துள்ளார். இது இனவாதிகளின் கருத்துகளுக்கு உரமூட்டுவதாகவே அமைந்திருக்கின்றது.

ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவை தெரிவு செய்த முஸ்லிம்கள் நாட்டில் சகல மக்களினதும் கலாச்சாரம் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று பெரிதும் எதிர்ப்பார்த்தனர்” என பாராளுமன்ற உறுப்பினரும், கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவரும், மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும்,

“நாட்டில் ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்கு சிறுபான்மை மக்கள் பெரிதும் பங்களிப்பு செய்துள்ளனர். அத்துடன் இதில் முஸ்லிம்களின் பங்கனது மகத்தானது எனலாம். இந்நிலையில் மாடறுப்பு குறித்த ஜனாதிபதியின் கருத்து முஸ்லிம்களை அவமதிப்புக்கு உள்ளாக்குவதாக அமைந்திருக்கின்றது.

அத்துடன் முஸ்லிம்களின் உணவு உண்ணும் உரிமையில் தலையிடுவதாக இருக்கிறது. இதனால் முஸ்லிம்கள் உரிமை மீறப்பட்டு மிகவும் மனவேதனையடைந்துள்ளனர் குறிப்பிட்டார்.

நாட்டில் மாடறுப்பதை கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி வெ ளிநாடுகளிலிருந்து மாட்டிறைச்சியை உணவுக்காக இறக்குமதி செய்யலாம் என குறிப்பிட்டிருக்கின்றார். அப்படியானால் எமது நாட்டிலல்லாமல் வெ ளிநாடுகளில் மாடுகளை அறுப்பதற்கு இடமளிக்க முடியும் என ஜனாதிபதி குறிப்பிடுகின்றாறா?

ஏனெனில் இங்கு மாடு அறுப்பட்டாலும் வெ ளிநாடுகளில் மாடு அறுக்கப்பட்டாலும் அது மிருக வதையாகவே குறிப்பிட வேண்டும்.

மடு அறுப்பது மாத்திரம் மிருக வதை என பார்க்கின்ற ஜனாதிபதி, ஆடு, கோழி, பன்றி போன்றவற்றை அறுப்பதற்கு தடை விதித்திருக்கலாமே. அத்துடன் பெரஹெராவிற்கு யானைகளை பயன்படுத்துவதும் மிருக வதையாகவே பார்க்கவேண்டும். மட்டுமல்லாது நாட்டில் மீன்பிடி தொழிலையே தடை செய்ய வேண்டும்.

இவையெல்லாம் மிருக வதையாக பார்க்காத ஜனாதிபதி ஏன் மாடறுப்பை மாத்திரம் மிருக வதையாக குறிப்பிட வேண்டும்? என்று முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்.

இனவாதிகளின் வேட்கைகளுக்கு இடமளிக்காது நாட்டில் சகல மக்களினது உரிமைகள் குறித்தும் ஜனாதிபதி சிந்திக்க தலைப்பட வேண்டும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்திற்கு செல்வதற்கான அத்திவாரங்கள் இடப்படக் கூடாது” என முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY