கடந்த வருடம் 25 இலட்சம் குழந்தைகள் இறந்து பிறந்துள்ளன

0
89

உலகில் இறந்த நிலையில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த 2015ம் ஆண்டில் மட்டும் இருபத்து ஐந்து இலட்சத்தை விட அதிகம் என புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.

இறந்தே பிறக்கும் குழந்தைகளின் விகிதம் உலகிலேயே அதிகமாக உள்ள நாடு பாகிஸ்தான் என்றும் அந்த ஆய்வு அறிக்கை கூறுகின்றது.

இறந்தே பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் இரண்டு பங்கிலானவை ஆப்பிரிக்காவில் தான் இடம்பெறுகின்றதாம்.

இறந்தே பிறந்த குழந்தைகளின் தொகையில் பாதிக்கும் மேலானவை பிரசவத்தின்போது இறந்தது தான், பயங்கரமான அதிர்ச்சியை தருவதாக தெரிவித்துள்ள அந்த அறிக்கை, அப்படியான இறப்புகளில் பெரும்பாலானவற்றை தடுத்திருக்கமுடியும் என்றும் தெரிவித்துள்ளது.

இறந்து பிறக்கும் குழந்தைகளில் 6.7 சதவீதமானவை 35 வயதுக்கு மேற்பட்ட வயதுடைய தாய்மாருக்கு பிறந்துள்ள அதேசமயம் ஏழ்மையும் இந்த குழந்தைகள் இறந்து பிறப்பதில் முக்கிய பங்கை வகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY