மிச் நகரில் உலர் உணவு வழங்கி வைப்பு!

0
220

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபைரின் முயற்சியினால் ஏறாவூர் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

ஏறாவூர் மிச்நகர் பிரதேசத்திலுள்ள 250 வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் மிச்நகர் ஜூம்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது.

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். அசீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் மற்றும் முன்னால் வலயக் கல்விப்பணிப்பாளர் யூ.எல் ஜெயினுத்தீன், அஷ்ஷேஹ் மும்தாஜ் மௌலவி, அதிபர் எம். ஜலால்தீன் ஆகியோர் கலந்துகொண்டு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிரினால்; வருடாவருடம் ஏறாவூர் பிரதேசத்திலுள்ள வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

றியாஸ் ஆதம்

LEAVE A REPLY