பொலிஸ் உத்தியோகத்தர்களின் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்களும் வங்கி சேமிப்பு புத்தகங்களும் வழங்கி வைப்பு

0
190

பொலிஸ் திணைக்களத்தின் சேவா வனிதா அமைப்பின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் முதலாம் தரத்திற்கு பாடசாலையில் இணையும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் வங்கி கணக்கு புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் வங்கி கணக்கு புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (19.01.2016) மட்டக்களப்பு உதவி பொலிஸ் அத்தியட்சர் காரியாலயத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட உதவி பொலிஸ் அத்தியட்சர் உபாலி ஜயசிங்ஹ தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யு..ஜே. ஜயக்கொடி ஆராய்ச்சி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி, காத்தான்குடி, ஏறாவூர், வாழைச்சேனை ஆகிய பிராந்தியங்களுக்கான உதவி பொலிஸ் அத்தியட்சர்கள், 11 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 11 பொலிஸ் நிலையங்களிலும் கடமையாற்றும் முதலாம் தரத்திற்கு பாடசாலையில் இணையும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்களும் வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தகங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

அப்துல்லாஹ்

LEAVE A REPLY